13 எம்.பிக்களின் கருத்து சுதந்திரம் பறிப்பு?

425

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் இருந்து சுயாதீனமாக எதிர்த்தரப்பில் செயற்படும் நாடாளுமன்ற உறுப்பினர் டளஸ் அழகப்பெரும உட்பட்ட 13 பேருக்கு நாடாளுமன்றில் கருத்துக்களை வெளியிடுவதற்கு நேரம் ஒதுக்காமை தொடர்பில் இன்று எதிர்கட்சிகள் கேள்வி எழுப்பின.

டளஸ் அழகப்பெரும இந்த விடயம் தொடர்பில் நாடாளுமன்றில் கேள்வி எழுப்பியமையை அடுத்து, அவருக்கு சார்பாக நாடாளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திசாநாயக்க மற்றும் எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச ஆகியோர் தமது வாதங்களை முன்வைத்தனர்.

இதனையடுத்து கருத்துரைத்த அவை முதல்வர் அமைச்சர் சுசில் பிரேமஜயந்த,

தாம் அரசாங்கத்தில் இருந்து சுயாதீனமாக செயற்பட்டதுபோது, தாம் நிதிக்குழுவில் இருந்து விலக்கப்பட்டதாகவும், கருத்துக்களை வெளியிடும் சுதந்திரம் பறிக்கப்பட்டதாகவும் குறிப்பிட்டார்.

எனினும் தமக்காக எவரும் பேசவில்லை என்று அவர் சுட்டிக்காட்டினார்.

இருப்பினும் டளஸ் அழகப்பெரும உட்பட்ட 13 பேரின் பிரச்சினை தொடர்பாக ஆராயப்படும் என்று உறுதியளித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here