புற்றுநோய்க்கான மருந்துகள் எப்போது கிடைக்கும்?

315

நாட்டில் நிலவுகின்ற ஒளடத பற்றாக்குறைக்கு விரைவில் தீர்வொன்று பெற்றுக்கொடுக்கப்படும் என அமைச்சர ரமேஷ் பத்திரன தெரிவித்தார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்றைய தினம் இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் வாராந்த செய்தியாளர் சந்திப்பில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அமைச்சர் ரமேஷ் பத்திரண இதனை தெரிவித்தார்.

அவர் மேலும் கருத்துரைக்கையில்,

வேறு துறைகளுக்காக ஒதுக்கப்பட்ட 100 பில்லியன் டொலர்கள் சுகாதார துறைக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. ஒளடதங்களை பெற்றுக்கொள்வதற்காக ஜனாதிபதியின் ஆலோசனையின் கீழ் இவ்வாறு ஒதுக்கப்பட்டுள்ளது.

ஒளடதங்கள் தொடர்பில் பல்வேறு நாடுகள் எமக்கு உதவியளித்தன. அதே நேரம் நிதியுதவியினையும் மேற்கொண்டன.

எவ்வாறாயினும் ஊடகவியலாளர்கள் தெரிவிக்கும் புற்றுநோய் தொடர்பான ஒளடதங்களும் இங்கு விசேடமாகும்.

சுகாதார அமைச்சர் நேற்றைய தினமும் இடம்பெற்ற கூட்டத்தின் போது விரைந்து ஒளடதங்களை பெற்றுக்கொள்ள ஆலோசனை வழங்கியுள்ளார்.

நாட்டில் ஒன்றுக்கு மேற்பட்ட பல பிரச்சினைகள் காணப்படுகின்ற போதிலும், ஒளடதங்கள், எரிபொருள், மற்றும் அத்தியாவசிய பொருட்களுக்கு அரசாங்கம் முன்னுரிமை வழங்கி வருகின்றது.

இதேவேளை பணம் கிடைக்கும் வரை சிகிச்சைக்காக புற்றுநோயாளர் ஒருவர் காத்திருக்க முடியாது என்பதோடு, அதற்கு அரசாங்கம் முக்கியத்துவம் அளிக்க வேண்டுல்லவா என அமைச்சர் ரமேஷ் பத்திரணவிடம் செய்தியாளர்கள் தொடர்ச்சியாக வினவினர்.

நான் மீண்டும் கூறுவதற்கு விரும்புகின்றேன். அரசாங்கம் எரிபொருள் ஒளடதங்கள், மற்றுமத்தி அத்தியாவசிய பொருட்களுக்கு அரசாங்கம் முன்னுரிமை வழங்கியுள்ளது.

எந்தவொரு சந்தர்ப்பத்திலும் அரசாங்கம் குறித்த அடிப்படை விடயங்களை புறக்கணித்தோ அல்லது அதனை நிராகரித்தோ செயற்படவில்லை.

எரிபொருள் ஒளடதங்கள் மற்றும் அத்தியாவசிய பொருட்களுக்கு முன்னுரிமை அளிப்பது எமது அரசாங்கத்தின் பொறுப்பாகும் என அவர் மேலும் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here