இறக்குமதி தடை இரண்டு வாரங்களுக்கு ஒருமுறை திருத்தப்படும்!

1070

அந்நிய செலாவணி நெருக்கடி காரணமாக சில இறக்குமதிகளுக்கு விதிக்கப்பட்ட தடை இரண்டு வாரங்களுக்கு ஒருமுறை திருத்தப்படும் என்று அரசாங்கம் அறிவித்துள்ளது.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று இடம்பெற்ற வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடக சந்திப்பின் போது, ​​அமைச்சர் ரமேஷ் பத்திரன இதனை தெரிவித்தார்.

தற்காலிக நடவடிக்கையாக சில பொருட்களின் இறக்குமதி மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் ரமேஷ் பத்திரன மேலும் தெரிவித்தார்.

அந்நிய செலாவணி நெருக்கடி காரணமாக இறக்குமதி கட்டுப்பாடு அமுலில் உள்ளதாகவும், அது தீர்க்கப்பட்டதும் அனைத்து கட்டுப்பாடுகளும் நீக்கப்படும் என்றும் அமைச்சர் கூறினார்.

இறக்குமதி தடை காரணமாக சில துறைகளில் தடை ஏற்படுத்திய தாக்கத்தை கருத்தில் கொண்டு, அரசாங்கம் இரண்டு வாரங்களுக்கு ஒருமுறை திருத்தும் மேற்கொள்ளும் என தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here