மேல் மாகாண முன்னாள் ஆளுநர் அசாத் சாலியை பிணையில் விடுவிக்குமாறு கோரி, அவரது சட்டத்தரணி முன்வைத்த கோரிக்கையை கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் நிராகரித்துள்ளது.
இதனையடுத்து, அவரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்க நீதிவான் உத்தவிட்டுள்ளார்.
சர்ச்சைக்குரிய கருத்தொன்றை வெளியிட்ட குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள அசாத் சாலி இன்று மீண்டும் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.