சிறுவர்களுக்கான பாராளுமன்ற ஒன்றியம் 21ஆம் திகதி கூடும்

451

இலங்கையிலுள்ள சிறுவர்களுக்கு சிறந்த எதிர்காலத்தை உருவாக்குவதற்காக சம்பந்தப்பட்ட அமைச்சுக்கள் மற்றும் ஏனைய நிறுவனங்களைத் தொடர்புபடுத்தி சிறுவர்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்கு உருவாக்கப்பட்டுள்ள சிறுவர்களுக்கான பாராளுமன்ற ஒன்றியம் எதிர்வரும் 21ஆம் திகதி கூடவுள்ளது.

சிறுவர்களின் நல்வாழ்வுக்கான கொள்கைகளை மாற்றம் செய்வது அல்லது புதிய
கொள்கைகளை அறிமுகப்படுத்துவது மற்றும் சகல சிறுவர்களினதும் நல்வாழ்வு குறித்த கொள்கைகளை தொடர்ந்தும் மறுஆய்வு செய்வது, சிறுவர்களுக்காகப் பணியாற்றும் பல்வேறு அமைச்சுக்கள், திணைக்களங்கள் மற்றும் பிரதிநிதிகளுடன் இணைந்து செயற்படுவது மற்றும் சிறுவர்கள் முகங்கொடுக்கும் பிரச்சினைகள் குறித்து அரசாங்க நிறுவனங்கள் பொதுமக்களின் கவனத்தை ஈர்க்கச் செய்வது என்பன இந்த ஒன்றியத்தின் பிரதான நோக்கங்களாகும்.

இதனைவிடவும், சிறுவர் உரிமைகள் குறித்து பிரசாரங்களை முன்னெடுப்பதற்கும், சட்டத்தை நடைமுறைப்படுத்தவும் அவற்றைக் கண்காணிப்பதற்கும் சிறுவர் தொடர்பில் காணப்படும் சட்டத்தை மறுசீரமைப்பது மற்றும் திருத்தம் செய்வது, தேவையான நிதி ஒதுக்கீடுகளைப் பெற்றுக் கொள்வதற்காகச் செயற்படுவது, சிறுவர்களின் உரிமைகளைப் பலப்படுத்தி அதன் ஊடாக அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தல், அவை குறித்துக் காணப்படும் சவால்களுக்கு முகங்கொடுக்க அரசாங்க, சிவில் சமூக அமைப்புக்களின் வளங்களை ஒன்றிணைப்பது போன்ற விடயங்களும் இதன் ஊடாக எதிர்பார்க்கப்படுகின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here