follow the truth

follow the truth

May, 19, 2024
Homeஉள்நாடுஅரச கட்டடங்கள் குறித்து தேசிய கொள்கை உருவாக்கப்பட வேண்டும் – கணக்காய்வாளர் நாயகம்

அரச கட்டடங்கள் குறித்து தேசிய கொள்கை உருவாக்கப்பட வேண்டும் – கணக்காய்வாளர் நாயகம்

Published on

அரச கட்டடங்கள் தொடர்பில் தேசிய கொள்கையொன்று உடனடியாக உருவாக்கப்பட வேண்டுமென கணக்காய்வாளர் நாயகம் பரிந்துரை செய்துள்ளார்.

அரச நிறுவனங்களுக்கான கட்டடத் தேவைகளை பூர்த்தி செய்தல் மற்றும் பயன்படுத்துதல் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட கணக்காய்வு அறிக்கையை சமர்ப்பித்தே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

2021 ஆம் ஆண்டு மார்ச் 31ஆம் திகதி வரையில், கூட்டுத்தாபனஙகள், சட்டபூர்வ அமைப்புகள், பல்கலைக்கழகங்கள், அரச நிறுவனங்கள் மற்றும் திட்டங்கள் உட்பட 142 அரச நிறுவனங்களின் 1,166 கட்டடப் பயன்பாடுகள் தொடர்பில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

2016ஆம் ஆண்டு முதல் 2020ஆம் ஆண்டு வரையிலான காலப்பகுதியில் அரசாங்கத்தினால் உரிய நிறுவனங்களுக்கு ஒதுக்கப்பட்ட 720 பில்லியன் ரூபா மூலதன ஒதுக்கீட்டில், 482 பில்லியன் ரூபா குறித்த கட்டடங்களின் தேவைகளுக்காக செலவிடப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.

இது அரசின் மூலதன ஒதுக்கீட்டில் 14 முதல் 16 வீதம் வரை உள்ளதாக கணக்காய்வாளரின் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அரச பணிகளுக்கான கட்டடங்களை குத்தகை அடிப்படையில் பெற்றுக்கொள்ளும் போது, அரசின் விலை மதிப்பு திணைக்களத்திலிருந்து பெறப்பட்ட மதிப்பீட்டைப் பொருட்படுத்தாமல் குத்தகை செலுத்தப்படுவதாகவும் அங்கீகரிக்கப்பட்ட குத்தகை தொகையை விட அதிகமாக குத்தகை செலுத்தப்பட்ட சந்தர்ப்பங்களும் காணப்படுவதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரச கட்டடங்கள் உட்பட நிதியல்லாத சொத்துக்களுக்கு முழுமையாக மையப்படுத்தப்பட்ட தகவல் அமைப்பைப் பேணுவதற்காக 2017ஆம் ஆண்டு மார்ச் மாதம் நிதி அமைச்சின் கீழ் நிறுவப்பட்ட கட்டுப்பாட்டு நாயக திணைக்களம், எதிர்பார்த்த இலக்கை அடையவில்லை என கணக்காய்வாளர் நாயகம் வௌியிட்டுள்ள அறிக்கையில் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

குறித்த144 நிறுவனங்களில், 71 நிறுவனங்கள் மாத்திரமே குத்தகை அடிப்படையில் தமது கட்டடங்களை பயன்படுத்துவதாகவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

144 நிறுவனங்களில் 118 நிறுவனங்கள், இணக்கச் சான்றிதழ் இல்லாத கட்டடங்களுக்கு உரிமை கோருவதும் தெரியவந்துள்ளது.

ஆய்விற்குட்படுத்தப்பட்ட 144 நிறுவனங்களில், 10 நிறுவனங்கள் தமக்கு சொந்தமான 87 கட்டடங்களை வெளித்தரப்பினருக்கு குத்தகை அடிப்படையில் வழங்கியுள்ள போதிலும் அதற்கான குத்தகையை அரச விலை மதிப்பு திணைக்களத்தினால் மதிப்பீடு செய்யவில்லை.

8 அரச நிறுவனங்கள் தமது கட்டடங்களை உரிய தொகையை மதிப்பிடாமல் தனியாருக்கு குத்தகை அடிப்படையில் வழங்கியுள்ளமையும் தெரியவந்துள்ளது.

LATEST NEWS

MORE ARTICLES

புத்தளத்தில் அனைத்து பாடசாலைகளுக்கும் நாளை விடுமுறை

சீரற்ற காலநிலை காரணமாக புத்தளம் மாவட்டத்திலுள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் நாளை (20) விசேட விடுமுறை வழங்கப்படவுள்ளதாக வடமேல் மாகாண...

கொழும்பு துறைமுகத்திற்கு அருகிலுள்ள கட்டிடம் ஒன்றில் தீ பரவல்

கொழும்பு துறைமுக வளாகத்தை அண்மித்துள்ள அதிவேக நெடுஞ்சாலைத் திட்டத்தின் பணியாளர்கள் வசிக்கும் கட்டிடமொன்றில் தீ பரவல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன. சம்பவ...

ஈரான் தூதுவரை தாக்கிய வர்த்தகர் விளக்கமறியலில்

இலங்கையில் ஈரானிய தூதுவரை தாக்கிய கொழும்பை சேர்ந்த வர்த்தகர் ஒருவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக கொம்பனித்தெரு பொலிஸார்...