கோழி இறைச்சியின் புதிய விலை அறிமுகம்

5105

தோலுடன் உறைந்த கோழியின் புதிய நிலையான விலையை அகில இலங்கை கோழி உற்பத்தியாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

தோலுடன் உறைந்த 1 கிலோகிராம் கோழி இறைச்சி இன்று முதல் ரூபா 1300 முதல் 1350 ரூபா வரையில் விற்பனை செய்யப்படும் என கோழி உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

கோழி இறைச்சி பயன்படுத்தி தயாரிக்கப்படும் பொருட்களை உள்ளூர் சந்தைக்கு தொடர்ச்சியாக வழங்குவது தொடர்பில் கலந்துரையாடுவதற்காக அதன் உறுப்பினர்கள் இன்று கூடவுள்ளதாக அகில இலங்கை கோழி உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் அஜித் குணசேகர தெரிவித்துள்ளார்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here