follow the truth

follow the truth

May, 20, 2025
Homeஉள்நாடுகே.பியின் கட்டுப்பாட்டின் கீழ் இருந்த கப்பல்கள், நிதி மற்றும் தங்கம் என்பவற்றுக்கு என்ன நடந்தது -...

கே.பியின் கட்டுப்பாட்டின் கீழ் இருந்த கப்பல்கள், நிதி மற்றும் தங்கம் என்பவற்றுக்கு என்ன நடந்தது – நாமல் கருணாரத்ன கேள்வி

Published on

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் சர்வதேச பொறுப்பாளரான கே.பியின் கட்டுப்பாட்டின் கீழ் இருந்த கப்பல்கள், நிதி மற்றும் தங்கம் என்பவற்றுக்கு என்ன நடந்தது என்று தேசிய மக்கள் சக்தியின் நிறைவேற்றுக்குழு உறுப்பினரும், அகில இலங்கை விவசாய சம்மேளனத்தின் தலைவருமான நாமல் கருணாரத்ன கேள்வி எழுப்பியுள்ளார்.

அர்ஜுன மகேந்திரன் என்பவர், சாதாரண அரச அதிகாரி. அவர் நாட்டை விட்டு தப்பியோடினார்.

கே.பி. எனப்படும் குமரன் பத்மநாதன், புலிகள் அமைப்பில் பலம்பொருந்திய தலைவராக இருந்தார். பிரபாகரனுக்கு அடுத்தப்படியாக அவரே தலைவர்.

இப்படிபட்ட கே.பி. உலக நாடுகளை சுற்றி வலம் வருகையில் கைது செய்யப்பட்டு, நாட்டுக்கு அழைத்துவரப்பட்டார். கே.பியை இவ்வாறு அழைத்துவர முடியுமென்றால், அர்ஜுன் மகேந்திரனை ஏன் கைது செய்ய முடியாமல் உள்ளது? ம

அதேபோல கே.பியின் கட்டளையை ஏற்று செயற்பட்ட இளைஞர்கள் சிறைகளில் உள்ளனர். கேபியோ வெளியில் சுகபோகம் அனுபவிக்கின்றார்.

கே.பியின் கட்டுப்பாட்டின்கீழ் இருந்த கப்பல்கள், பணம், தங்கத்துக்கு என்ன நடந்தது, மர்மமாகவே உள்ளது.

அதேவேளை, உணவுப் பொருட்களின் விலைகள் தொடர்ச்சியாக அதிகரிக்கையில், விவசாயிகளிடமிருந்து குறைந்த விலைக்கே நெல் கொள்வனவு செய்யப்படுகின்றது. இவ்வாறு குறைந்த விலையில் நெல்லை வாங்கிவிட்டு, அதிக விலைக்கு அரிசி விற்கப்படுகின்றது என அகில இலங்கை விவசாய சம்மேளனத்தின் தலைவருமான நாமல் கருணாரத்ன தெரிவித்துள்ளார்

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

கெஹெலிய ரம்புக்வலவுக்கு விளக்கமறியல்

முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வலவை எதிர்வரும் 03ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம்...

கொட்டஹேன மாணவி தற்கொலை – பாடசாலை அதிபருக்கு இடமாற்றம்

கொழும்பு, கொட்டஹேனவில் 10 ஆம் வகுப்பு மாணவி தற்கொலை செய்து கொண்டதைத் தொடர்ந்து, அந்த மாணவி படித்த பம்பலப்பிட்டி...

தேங்காய் அறுவடையில் அதிகரிப்பு.

கடந்த ஆண்டு மே மற்றும் ஜூன் மாதங்களுடன் ஒப்பிடும்போது இந்த ஆண்டு மே மற்றும் ஜூன் மாதங்களில் தேங்காய்...