follow the truth

follow the truth

May, 16, 2024
Homeஉள்நாடுஅநுராதபுரம் முதல் ஓமந்தை வரையான ரயில் போக்குவரத்து இடைநிறுத்தம்

அநுராதபுரம் முதல் ஓமந்தை வரையான ரயில் போக்குவரத்து இடைநிறுத்தம்

Published on

வடக்கு  ரயில்வே மார்க்கத்தில் அநுராதபுரம் முதல் ஓமந்தை வரையான ரயில் போக்குவரத்து எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் 5 மாதங்களுக்கு இடைநிறுத்தப்படவுள்ளது.

இந்தியாவின் நிதி உதவித் திட்டத்தின் கீழ் வடக்கிற்கான ரயில் பாதை புனரமைப்புப் பணிகள் எதிர்வரும் ஜனவரி மாதம் ஆரம்பிக்கப்படவுள்ளன.

இதன் காரணமாக ஜனவரி மாதம் முதல் 5 மாதங்களுக்கு அநுராதபுரம் தொடக்கம் ஓமந்தை வரையான ரயில் போக்குவரத்து  இடைநிறுத்தப்படவுள்ளதாக போக்குவரத்துத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

கொழும்பிலிருந்து  அநுராதபுரம் வரை ரயில் மூலம் பயணிக்கும்  பயணிகள், அங்கிருந்து ஓமந்தை வரை பயணிப்பதற்காக பஸ்கள் ஒழுங்கு செய்யப்படவுள்ளன.

பின்னர் ஓமந்தையிலிருந்து யாழ்ப்பாணம் வரை செல்வதற்கான ரயில் வசதிகளும் ஏற்படுத்திக்கொடுக்கப்படவுள்ளன.

LATEST NEWS

MORE ARTICLES

ஷெஹான் சேமசிங்கவுக்கு கொலை மிரட்டல்

நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்கவிற்கு மரண அச்சுறுத்தல் விடுக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் இராஜாங்க அமைச்சர் செய்த முறைப்பாட்டின்...

அரச ஊழியர்களுக்கு இந்த வருடம் சம்பள உயர்வு வழங்கப்பட மாட்டாது

அரச ஊழியர்களுக்கு இந்த வருடம் சம்பள உயர்வு வழங்கப்பட மாட்டாது என ஜனாதிபதி அமைச்சரவைக்கு அறிவித்துள்ளதாக விவசாய மற்றும்...

எல்ல – வெல்லவாய வீதிக்கு தற்காலிகமாக பூட்டு

இன்று காலை முதல் பெய்து வரும் கடும் மழை காரணமாக பதுளை மாவட்டம் எல்ல வெல்லவாய வீதியை இன்று...