விசேட தேவையுடையோர் பயன்படுத்தும் உபகரணங்களுக்கு தட்டுப்பாடு!

535

விசேட தேவையுடையோர் பயன்படுத்தும் உபகரணங்களுக்கான இறக்குமதிக்கு தடை காரணமாக அந்த உபகரணங்களுக்காக தட்டுப்பாடு அதிகரித்துள்ளதாக இலங்கை விழி புலன் இழந்தோர் சம்மேளனம் தெரிவித்துள்ளது.

நாட்டில் சுமார் 9 இலட்சமானோர் கண் பார்வையை இழந்துள்ளதாகவும், சுமார் 16 இலட்சத்துக்கும் அதிகமானோர் விசேட தேவையுடையவர்களாக இருப்பதாகவும் அந்த சம்மேளனம் தெரிவித்துள்ளது

அமெரிக்க டொலரின் பெறுமதி உயர்வு மற்றும் இறக்குமதி கட்டுப்பாடுகளினால், வெள்ளை பிரம்புகள், கண் பார்வை இழந்த மாணவர்கள் பயன்படுத்தும் பிரெயில் சிலேட், எழுத பயன்படுத்தப்படும் பிரத்தியேக பேனை, பேசும் கைக்கடிகாரங்கள் போன்ற பொருட்களின் விலைகளும் அதிகரித்துள்ளன.

இதன்காரணமாக விசேட தேவையுடையவர்கள் பல பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்துள்ளதாக இலங்கை கண் பார்வை இழந்தோர் சம்மேளனம் குறிப்பிட்டுள்ளது.

அத்துடன், விசேட தேவையுடையவர்களுக்கான அவசியமான உபகரணங்களை இறக்குமதி செய்யவும், அந்த உபகரணங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள வரியை நீக்கி சலுகைகளை வழங்குமாறு இலங்கை தேசிய கண் பார்வை இழந்தோர் சம்மேளனத்தின் தலைவர் கமல் சிறி நாணாயக்கார கோரியுள்ளார்.

2019ஆம் ஆண்டில், பிரெயில் சிலேட் ஒரு இலட்சத்து 50 ஆயிரம் ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்டது.

தற்போது அந்த இயந்திரம் 5 இலட்சம் ரூபாய்வரை விற்பனை செய்யப்படுகிறது.

அதற்கு பயன்படுத்தும் பேனை 3,500 ரூபாவால் அதிகரித்துள்ளது.

அத்துடன் விசேட தேவையுடையவர்களுக்கான சக்கர நாற்காலிகள் ஒரு இலட்சம் ரூபாவுக்கும் அதிக விலைகளில் விற்பனை செய்யப்படுகின்றன.

இந்த நிலையில், குறித்த பொருட்களுக்கான இறக்குமதி தடையை நீக்குமாறு அரசாங்கத்திடம் கோரியுள்ளதாக இலங்கை தேசிய கண் பார்வை இழந்தோர் சம்மேளனத்தின் தலைவர் கமல்சிறி நாணயக்கார தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here