follow the truth

follow the truth

May, 19, 2024
HomeUncategorizedவழக்கை கைவிடுங்கள் – அமெரிக்க நீதிமன்றத்திடம் இலங்கை கோரிக்கை!

வழக்கை கைவிடுங்கள் – அமெரிக்க நீதிமன்றத்திடம் இலங்கை கோரிக்கை!

Published on

இறையாண்மை பத்திரங்களை செலுத்த தவறியமை தொடர்பாக ஹமில்டன் ரிசர்வ் வங்கி நியூயோர்கில் தாக்கல் செய்த வழக்கை தள்ளுபடி செய்யுமாறு அமெரிக்க நீதிபதியை இலங்கை அரசாங்கம் கோரியுள்ளது.

நிதிச் செய்தி சேவை நிறுவனமான ப்ளூம்பெர்க் இதனைத் தெரிவித்துள்ளது.

இந்த வழக்கு, நெருக்கடியில் உள்ள ஒரு நாட்டின் மீது செல்வாக்கு செலுத்தி மற்ற வெளிநாட்டு கடன் வழங்குநர்களை விட நலன் பெறுவதற்கான வெளிப்படையான முயற்சி என்று கூறி, வழக்கை தள்ளுபடி செய்யுமாறு இலங்கை அரசாங்கம் கோரியுள்ளது.

ஒரு பில்லியன் டொலர் இறையாண்மைப் பத்திரத்தை, இலங்கை செலுத்தத் தவறியதைக் காரணம் காட்டி, கரீபியன் தீவுகளான செயின்ட் கிட்ஸ் & நெவிஸை தளமாகக் கொண்ட ஹமில்டன் ரிசர்வ் வங்கி இந்த வழக்கை தாக்கல் செய்துள்ளது.

இலங்கை, கடந்த 2022 ஜூலை 25ஆம் திகதி அன்று 5.875% வட்டியில் சர்வதேச இறையாண்மை பத்திரங்களை செலுத்த வேண்டியிருந்தது.

இதேவேளை, பத்திரங்களின் விதிமுறைகளின்படி, இலங்கை, அந்த வங்கிக்கு மொத்தம் 257,539,331.25 அமெரிக்க டொலர்கள் செலுத்த வேண்டியுள்ளது.

இது 250,190,000 டொலர் அசல் மற்றும் 7,349,331.25 டொலர் வட்டியை உள்ளடக்கியுள்ளதாக நீதிமன்ற ஆவணங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

LATEST NEWS

MORE ARTICLES

மீண்டும் Race The Pearl – சர்வதேச போட்டியாளர்களுடன் 24 மணிநேர சைக்கிளோட்டம்

சுருக்கம் உலகப்புகழ் பெற்ற Tour De France இன் வெற்றியாளரும், RAAM இன் போட்டியாளரும் பங்கேற்கும் 24 மணிநேர சைக்கிள்...

கண் நோய் தொடர்பில் சுகாதார திணைக்களத்தின் அறிவித்தல்

கண் நோய்களில் இருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ள சுகாதாரப் பாதுகாப்பு நடவடிக்கைகளைப் பின்பற்றுமாறு சுகாதாரத் துறை மக்களுக்கு அறிவுறுத்துகிறது. இந்த...

பேருந்தில் பெண் ஒருவர் மீது துப்பாக்கி சூடு

ஹம்பலாந்தோட்டை - மடயமலந்த பகுதியில் பேருந்து ஒன்றில் பயணித்த பெண் ஒருவர் மீது துப்பாக்கி பிரயோகம் நடத்தப்பட்டுள்ளது. சம்பவத்தில் காயமடைந்த...