follow the truth

follow the truth

May, 17, 2024
Homeஉள்நாடுஅரச வாகனங்களை அனுமதியின்றி பயன்படுத்தியமை தொடர்பில் இரண்டு எம்.பி.க்களின் பெயர்கள் வெளியானது!

அரச வாகனங்களை அனுமதியின்றி பயன்படுத்தியமை தொடர்பில் இரண்டு எம்.பி.க்களின் பெயர்கள் வெளியானது!

Published on

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) பாராளுமன்ற உறுப்பினர்கள் இருவர் தமது உத்தியோகபூர்வ அரச வாகனங்களை மீள ஒப்படைக்கத் தவறியமைக்காக அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பது குறித்து ஜனாதிபதி செயலகம் பரிசீலித்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அனுராதபுரம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் K.P.S என்பவரிடம் இருந்து சொகுசு Land Cruiser ஒன்று கைப்பற்றப்பட்டுள்ளதாக ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன களுத்துறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் லலித் எல்லாவலவிடமிருந்து  Toyota Hilux கெப் வண்டியொன்றையும் ஜனாதிபதி செயலகம் கைப்பற்றியதாக குறித்த ஆங்கில ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

குறித்த இரண்டு பாராளுமன்ற உறுப்பினர்களும் பயன்படுத்திய Toyota Land Cruiser மற்றும் Toyota Hilux Cab ஆகிய இரு வாகனங்களின் சந்தை மதிப்பு சுமார் ரூ. 50 மில்லியன்.

பாராளுமன்ற உறுப்பினர்களான குமாரசிறி மற்றும் லலித் எல்லாவல ஆகியோர் தமது பொதுப்பணிகளை மேற்கொள்வதற்காக வாகனங்களை கோரியதையடுத்து முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இந்த வாகனங்களை ஜனாதிபதி செயலகத்தில் இருந்து விடுவித்திருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

LATEST NEWS

MORE ARTICLES

யாருடனும் பேச்சுவார்த்தை நடத்த தயார் – ஜனாதிபதி

பேச்சுவார்த்தைக்கு தயாராக உள்ள எவருடனும் பேச்சுவார்த்தை நடத்த தயார் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். நேற்று (16) பிற்பகல்...

கண்டி நகரம் வெள்ளத்தில் மூழ்கியது: போக்குவரத்து பாதிப்பு

கண்டி நகரில் இன்று (16) பெய்த கடும் மழையினால் கண்டி ரயில் நிலையம் மற்றும் கண்டி நகரின் பல...

“ஜனாதிபதி தேர்தலை ஒத்திவைக்க சட்டம் இல்லை”

தற்போதைய ஜனாதிபதி ஜனாதிபதித் தேர்தலை ஒத்திவைக்க முயற்சித்தாலும் அதற்கு சட்டரீதியாக சாத்தியமில்லை என பேராசிரியர் ஜி. எல். பீரிஸ்...