இந்த நாட்டின் மக்களிற்கு கேலி செய்ய மாத்திரம்தான் தெரியும் – ஞானசார தேரர்

2076

சவுதி அரேபியாவின் தேசிய தின நிகழ்வுகளில் கலந்துகொண்டமை குறித்து சமூக ஊடகங்களில் வெளியாகும் விமர்சனங்களை கருத்தில் எடுக்கப்போவதில்லை என பொதுபல சேனாவின் பொதுச்செயலாளர் ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.

தன்னை பற்றி வெளியாகியுள்ள முகநூல் பதிவுகள் குறித்து ஆங்கில ஊடகம் ஒன்றிற்கு கருத்து தெரிவித்துள்ள அவர், எவரும் கேலிசெய்யலாம் விமர்சிக்கலாம் அவர்களை பற்றி யாருக்கு கவலை.

போதியளவிற்கு விமர்சித்துவிட்டோம் கேலி செய்துவிட்டோம் என அவர்கள் நினைக்கும்போது அவர்கள் அதனை நிறுத்திவிடுவார்கள்.

இந்த நாட்டின் மக்களிற்கு விமர்சனத்துடன் கேலி செய்ய மாத்திரம்தான் தெரியும் எனவும் தெரிவித்துள்ளார்.

முஸ்லீம் மக்களிற்கு எதிரான கருத்துக்களை கொண்டுள்ள ஞானசார தேரர் கடந்த வெள்ளிக்கிழமை கொழும்பில் சவுதி அரேபியாவின் தேசிய தின நிகழ்வுகளில் கலந்து கொண்டார்.

இதனை தொடர்ந்து அவர் குறிப்பிட்ட நிகழ்வில் கலந்துகொண்டதை விமர்சித்து கேலியான பதிவுகள் சமூக ஊடகங்களில் வெளியாகியிருந்தன.

அவரை அழைத்தமை நாட்டின் முஸ்லீம்களை அவமரியாதை செய்தமைக்கு சமமானது என முகநூலில் கருத்துக்கள் வெளியாகியுள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here