follow the truth

follow the truth

June, 17, 2025
Homeஉள்நாடுஉண்மையான பயங்கரவாதிகள் யாரென்பதை மக்கள் கண்டறிய வேண்டும் - சாணக்கியன்

உண்மையான பயங்கரவாதிகள் யாரென்பதை மக்கள் கண்டறிய வேண்டும் – சாணக்கியன்

Published on

சிஸ்டம் சேஞ்ச் (முறைமை மாற்றம்) கோரி போராடியவர்கள் இன்று தண்டிக்கப்படுகின்றனர். அவர்களுக்கு எதிராகவே பயங்கரவாத தடைச்சட்டம் பயன்படுத்தப்படுகின்றது. நாட்டுக்காக போராடிய அவர்கள் பயங்கரவாதிகள் அல்லர். உண்மையான பயங்கரவாதிகள் யாரென்பதை மக்கள் கண்டறிய வேண்டும்.என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

பயங்கரவாத தடைச்சட்டம் என இச்சட்டத்துக்கு பெயர் இருந்தாலும், பயங்கரவாத தடுப்புக்கு எதிராக பயன்படுத்துவதில்லை. மாறாக சாதாரண மக்கள் தற்போது இலக்கு வைக்கப்படுகின்றனர். பயங்கரவாத தடைச்சட்டத்திலுள்ள சரத்துகள் பயங்கரமானவை. வழக்கு தொடுக்காமல் பல வருடங்கள் தடுப்பில் வைத்து விசாரிக்கலாம், பயங்கரவா தடைச்சட்டத்தின்கீழ் கைதான ஒருவர் பொலிஸாருக்கு வழங்கிய வாக்குமூலத்தை நீதிமன்றத்தை சாட்சியாக பயன்படுத்தலாம்.

இந்த பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்குமாறு வலியுறுத்தும் கையெழுத்து போராட்டத்தை நாம் மார்ச் மாதமே ஆரம்பித்துவிட்டோம். ஏனெனில் இச்சட்டம் மக்கள்மீது பாயும் என்பது எமக்கு தெரியும். தமக்கு விசுவாசமான வியாபாரிகளுக்கு அரசாங்கம் வரிச்சலுகை வழங்கும்போதே, இந்நாடு வங்குரோத்தடையும் என்பது எமக்கு தெரியும். அந்நிய செலாவணிமீது கைவைத்தபோது, வரிசை யுகம் உருவாகும் என்பதும் தெரியும்.

இதற்கிடையில் மக்கள் எழுச்சி போராட்டம் வெடித்தது. நாட்டுக்காக போராடிய இளைஞர்கள் இன்று பயங்கரவாத தடைச்சட்டத்தின்கீழ், தண்டிக்கப்படுகின்றனர். வசந்த முதலிகே பயங்கரவாதியா? போராட்டக்காரர்கள் பயங்கரவாதிகளா?

உண்மையான பயங்கரவாதிகள் யார்? உரத்தை இல்லாது செய்தது யார், அந்திய செலாவணியை இல்லாது செய்தது யார், வரிசை யுகத்தை உருவாக்கியது யார் , குழந்தைகளுக்கு பால்மாவை இல்லாது செய்தது யார், இவர்களே உண்மையான பயங்கரவாதிகள் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் தெரிவித்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

உற்பத்தித்திறன் மேம்பாட்டுக்கான சர்வதேச பயிற்சி நிகழ்ச்சித் திட்டம்

ஆசிய உற்பத்தித்திறன் அமைப்பின் (APO) ஆதரவுடன் தேசிய உற்பத்தித்திறன் செயலகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட உற்பத்தித்திறன் நிபுணர்களின் மேம்பாட்டுக்கான சர்வதேச...

தொழிலுக்காக இஸ்ரேலுக்கு இலங்கையர்களை அனுப்புவது இடைநிறுத்தம்

இஸ்ரேலுக்கு வேலைவாய்ப்புக்காக இலங்கையர்களை அனுப்புவது தற்காலிகமாக இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக வெளியுறவு மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண்...

2028 ஆம் ஆண்டாகும்போது, சொந்த முயற்சியின் மூலம் கடனை திருப்பிச் செலுத்தக்கூடிய பொருளாதார வளர்ச்சியும், ஸ்திரத்தன்மையும் நாட்டில் உருவாக்கப்படும்

2028 ஆம் ஆண்டளவில் நாம் செலுத்த வேண்டிய வெளிநாட்டுக் கடன்களை சொந்த முயற்சியின் மூலம் செலுத்தக் கூடிய பொருளாதார...