follow the truth

follow the truth

May, 19, 2025
Homeஉள்நாடுதிரிபோஷவின் தரத்தை ஆராய 2 நிறுவனங்களால் பரிசோதனை!

திரிபோஷவின் தரத்தை ஆராய 2 நிறுவனங்களால் பரிசோதனை!

Published on

திரிபோஷ தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட 2 நிறுவனங்களின் அறிக்கைகள் எதிர்வரும் நாட்களில் கிடைக்கப்பெற உள்ளதாக திரிபோஷ நிறுவனம் தெரிவித்துள்ளது.

மேலும், கைத்தொழில் தொழில்நுட்ப நிறுவனம் மற்றும் அரச இரசாயன பகுப்பாய்வு திணைக்களத்தின் அறிக்கைகளே கிடைக்கவுள்ளதாக நிறுவனத்தின் தலைவர் தீப்தி குலரத்ன தெரிவித்தார்.

அந்த அறிக்கைகள் கிடைத்ததன் பின்னர் திரிபோஷவின் தரம் குறித்து அறிவிக்கவுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

இதனிடையே, உரிய குறியீட்டின் படி உற்பத்தி செய்யப்படும் திரிபோஷ, சுகாதார வைத்திய அதிகாரிகளின் அலுவலகங்களுக்கு தொடர்ச்சியாக விநியோகிக்கப்படும் என இலங்கை திரிபோஷ நிறுவனத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.

திரிபோஷ உற்பத்திக்காக பயன்படுத்தப்படும் சோளத்திலுள்ள அஃப்லடோக்சின் (Aflatoxin) வீதம் தொடர்பிலான அறிக்கையும் உள்ளடக்கப்படவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

நாளை பத்தரமுல்ல பகுதியில் விசேட போக்குவரத்து திட்டம்

நாளை (19) நடைபெறவுள்ள தேசிய வீரர்கள் விழாவை முன்னிட்டு, பத்தரமுல்ல பாராளுமன்றத்தைச் சுற்றியுள்ள பகுதியில் விசேட போக்குவரத்துத் திட்டம்...

கொழும்பில் நீரில் மூழ்கும் 20க்கும் அதிகமான இடங்கள் அடையாளம்

அதிக மழையினால் கொழும்பு மாநகர சபைக்குட்பட்ட பகுதிகளில் நீரில் மூழ்கும் 20க்கும் அதிகமான இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நீரை...

இராணுவ நினைவு தின தேசிய நிகழ்ச்சி நாளை

தாய் நாட்டின் சுதந்திரம் மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டிற்காக தங்கள் உயிரைத் தியாகம் செய்த வீரமிக்க போர்வீரர்கள் மீது இலங்கை...