உலக நீர்வெறுப்பு நோய் இன்றாகும். ”ஒன்றிணைவோம் – மனித நீர்வெறுப்பு நோயை ஒழிப்போம்” என்பதே இந்த ஆண்டில் அதன் கருப்பொருள்.
விசர்நாய் கடியினால் இந்த நோய் ஏற்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 28 அன்று உலக சுகாதார நிறுவனம், விலங்குகள் ஆரோக்கியம் மற்றும் உணவு மற்றும் வேளாண்மைக்கான உலக அமைப்பு ஆகியவற்றினால் கடைபிடிக்கப்படுகிறது.
இதற்கிடையில், 2022 ஆம் ஆண்டில் இதுவரையில் நீர்வெறுப்பு நோயினால் இலங்கையில் 23 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அவர்களில் சுமார் 4 குழந்தைகளும் உள்ளடங்குகின்றனர். நாட்டில் நாய்களின் எண்ணிக்கை 3 மில்லியன் எனவும் அவற்றில் 50 சதவீதமானவற்றுக்கு விசர்நாய் நிலைமைக்கு எதிரான தடுப்பூசி போடப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதற்கிடையில், நீர்வெறுப்பு நோயினால் பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானவர்கள் யாசகர்கள் மற்றும் போதைக்கு அடிமையானவர்கள் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.