Popular Front of India அமைப்புக்கு 5 ஆண்டுகள் தடை

439

பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பு (Popular front of India organization) மற்றும் அது சார்ந்த அமைப்புகள், துணை அமைப்புகள் ஆகியவற்றுக்கு 5 ஆண்டுகள் தடை விதித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

தீவிரவாத செயல்களுக்கு துணை செய்தல், நிதி திரட்டுதல் ஆகியவற்றில் ஈடுபடுவதாக புகார் எழுந்ததையடுத்து, 11 மாநிலங்களில் என்ஐஏ அமைப்பினர் பிஎப்ஐ அமைப்பின் அலுவலகங்கள், நிர்வாகிகளின் வீடுகளில் நேற்று முன்தினம் சோதனை நடத்தினர்.

இந்த சோதனையில் ஏராளமான ஆவணங்கள், ஆதாரங்களை என்ஐஏ அமைப்பினர் கைப்பற்றினர். 11மாநிலங்களி்ல் இருந்து 106 பேர் கைது செய்யப்பட்டனர். இதில் கேரளாவில் அதிகபட்சமாக 22 பேர் கைது செய்யப்பட்டனர்.

இந்நிலையில் 2வது சுற்றாக நேற்று 8 மாநிலங்களில் தேசிய விசாரணை முகமை சோதனை நடத்தியது. இதில் 150க்கும் மேற்பட்ட பிஎப்ஐ அமைப்புடன் தொடர்பில் இருப்போர், பிஎப்ஐ அமைப்பினர் உள்ளிட்டோரை கைது செய்து விசாரித்து வருகிறார்கள். இந்த சூழலில் மத்திய அரசு இந்தத் தடையை விதித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here