follow the truth

follow the truth

May, 19, 2024
Homeஉள்நாடுஇடம்பெயர்ந்த கஜீமா தோட்ட மக்களுக்கு விரைவில் நிவாரணம்!

இடம்பெயர்ந்த கஜீமா தோட்ட மக்களுக்கு விரைவில் நிவாரணம்!

Published on

கொழும்பு – பாலத்துறை கஜீமா தோட்டத்தில் பரவிய தீயினால் இடம்பெயர்ந்துள்ள 300 பேருக்கு விரைவில் நிவாரணம் வழங்கப்படும் என கொழும்பு மாவட்ட செயலாளர் பிரதீப் யசரத்ன தெரிவித்துள்ளார்.

இந்த மக்களுக்காக நகர அபிவிருத்தி அதிகார சபைக்கு சொந்தமான குடியிருப்பு தொகுதிகளில் இருந்து வீடுகளை வழங்குவதற்கான முன்மொழிவொன்று இன்று(28) மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவிடம் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பு – பாலத்துறை கஜீமா தோட்ட மாடி குடியிருப்பில் நேற்றிரவு  மணியளவில் பரவிய தீயினால் 80 வீடுகளுக்கு சேதம் ஏற்பட்டுள்ளது.

கொழும்பு தீயணைப்பு பிரிவினர் மற்றும் பிரதேச மக்களால் தீ கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டது.

தீ பரவியமைக்கான காரணத்தை கண்டறிவதற்காக இன்று  இரசாயன பகுப்பாய்வொன்று நடத்தப்படவுள்ளது.

LATEST NEWS

MORE ARTICLES

கொழும்பில் சில வீதிகளுக்கு பூட்டு

15ஆவது இராணுவ நினைவு தின தேசிய நிகழ்வு இன்று பிற்பகல் நாடாளுமன்ற மைதானத்துக்கு அருகில் உள்ள இராணுவ நினைவுத்...

சீரற்ற காலநிலை – வாகன சாரதிகளுக்கு விசேட அறிவிப்பு

கொழும்பு மற்றும் புறநகர் பகுதிகளில் மழையுடனான காலநிலை அதிகரித்து வருவதால், வீதியில் மரங்களுக்கு கீழ் வாகனங்களை நிறுத்தும் போது...

கொழும்பில் 22 வெள்ள அபாய பகுதிகள் அடையாளம்

கொழும்பு மாவட்டத்தில் வெள்ள அபாய பகுதிகள் 22 இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக கொழும்பு மாநகர சபை தெரிவித்துள்ளது. வடிகால் அமைப்புகளின்...