follow the truth

follow the truth

May, 18, 2025
Homeஉள்நாடுஜனாதிபதி இன்று ஜப்பான் பிரதமர் மற்றும் பேரரசரை சந்தித்தார்!

ஜனாதிபதி இன்று ஜப்பான் பிரதமர் மற்றும் பேரரசரை சந்தித்தார்!

Published on

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களுக்கும் ஜப்பானிய பிரதமர் ஃபுமியோ கிஷிடாவுக்கும் (Fumio Kishida) இடையிலான சந்திப்பு இன்று முற்பகல் டோக்கியோவிலுள்ள அகசகா மாளிகையில் நடைபெற்றது.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களை அன்புடன் வரவேற்ற ஜப்பானிய பிரதமர், ஜனாதிபதியாக பதவியேற்றதற்கு தனது வாழ்த்துகளை இதன்போது தெரிவித்தார்.

No description available.

இலங்கை மற்றும் ஜப்பானுக்கு இடையிலான நெருங்கிய உறவுகளை மேலும் வலுப்படுத்தல் மற்றும் எதிர்கால வேலைத்திட்டங்கள் குறித்து இரு நாட்டு தலைவர்களும் நீண்ட நேரம் கலந்துரையாடினர்.

இதேவேளை, ஜப்பானிய பேரரசர் நருஹிதோவிற்கும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களுக்கும் இடையிலான சந்திப்பொன்றும் இன்று முற்பகல் நடைபெற்றது.

No description available.

டோக்கியோவில் உள்ள பேரரசரின் உத்தியோகபூர்வ இல்லமான இம்பீரியல் அரண்மனையில் நடைபெற்ற இச்சந்திப்பின்போது, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களுக்கு மகத்தான வரவேற்பு அளிக்கப்பட்டமை குறிப்பிடதக்கது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

துசித ஹல்லொலுவ மீது துப்பாக்கிச்சூடு

தேசிய லொத்தர் சபையின் முன்னாள் பணிப்பாளர் துசித ஹல்லொலுவ இனந்தெரியாத நபர்களால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்துள்ளார். நாராஹென்பிட்டி கிரிமன்டல...

இன்று இரவு நேர தபால் ரயில் சேவைகளும் இரத்து

ரயில் நிலைய அதிபர்களின் பணிப்புறக்கணிப்பு காரணமாக இன்று (17) இரவு இயக்கப்படவிருந்த இரவு நேர தபால் ரயில் சேவைகளும்...

மின்சார கட்டணம் 18.3 சதவீதத்தினால் உயர்வு?

மின்சாரக் கட்டணங்களை அதிகரிக்கும் திட்டத்தில் நிலையான கட்டணங்கள் மற்றும் யூனிட் கட்டணங்கள் இரண்டையும் அதிகரிக்க முன்மொழியப்பட்டுள்ளது. இருப்பினும், பொதுப் பயன்பாட்டு...