ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தேசிய சபையில் இணையாது என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
கட்சியின் தலைமையகத்தில் இன்று இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு தகவல் தெரிவித்த அவர், இதனை குறிப்பிட்டார்.
தேசிய சபையின் ஆரம்பக் கூட்டம் நாளை (29) நடைபெறவுள்ளது. சபாநாயகர்
மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் முற்பகல் 10.30 மணியளவில் இந்த சந்திப்பு ஆரம்பமாகவுள்ளது.
மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் முற்பகல் 10.30 மணியளவில் இந்த சந்திப்பு ஆரம்பமாகவுள்ளது.
பிரதமர் தினேஷ் குணவர்தனவின் யோசனையின் கீழ், சகல அரசியல் கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்களையும் உள்ளடக்கிய தேசிய சபைக்கு பரிந்துரைக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களின் பெயர்களை, சபாநாயகர் கடந்த செப்டெம்பர் 23 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் அறிவித்தார்.