பெண் பிரதிநிதித்துவத்தை அதிகரிக்குமாறு பிரதமரிடம் முஸ்லிம் பெண்கள் கோரிக்கை !

863

அரசியலில் தமது பிரதிநிதித்துவத்தை அதிகரிக்க விரும்புவதாகவும், எனவே 50% பெண் அரசியல் பிரதிநிதித்துவத்தை நியமனப் பட்டியலில் கட்டாயப்படுத்துமாறும் முஸ்லிம் அரசியல் பெண் செயற்பாட்டாளர்கள் நேற்றைய தினம் ரதமர் தினேஷ் குணவர்தனவை சந்தித்து கோரிக்கைவிடுத்துள்ளனர்.

வேட்புமனுப் பட்டியலில் பெண் பிரதிநிதித்துவத்தை 50% உயர்த்துமாறு குணவர்தனவிடம் கோரிக்கை விடுத்தோம் என அரசியல் செயற்பாட்டாளர் ஃபிரியல் அஷ்ரப் தெரிவித்துள்ளார்

முஸ்லிம் பெண்களை அரசியலுக்கு வரச் செய்வது மிகவும் கடினம் என்ற பொதுவான கருத்து சில நபர்களிடையே இருப்பதாகவும் வேட்புமனுவில் முஸ்லிம் பெண்கள் இருப்பது சில கட்சிகளின் நலன்களுக்கு எதிரானது என்றும், எனவே இந்தக் கட்சிகள் அதை கட்டாயமாக்க வேண்டாம் என்று விரும்புவதாகவும் ஃபெரியல் அஷ்ரப் தெரிவித்தார்

இதேவேளை, பெண்களுக்கு சமமான பிரதிநிதித்துவம் வழங்காதவரை தேர்தலில் போட்டியிட கட்சிகளை அனுமதிக்கக் கூடாது என பிரதிநிதிகள் வலியுறுத்தியதாக மன்னார் மகளிர் அபிவிருத்தி சம்மேளனத்தின் இணை நிறுவனர் ஷிரீன் அப்துல் சாரூர் தெரிவித்துள்ளார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here