பாராளுமன்றத்தில் கூடிய தேசிய சபை : எடுக்கப்பட்ட தீர்மானங்கள் என்ன ?

698

‘தேசிய சபை’ ஆரம்ப விழாவில் இரண்டு துணைக்குழுக்களை நியமிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதுடன் குறுகிய, நடுத்தர மற்றும் நீண்ட கால தேசிய கொள்கைகளை உருவாக்குவது தொடர்பாக பாராளுமன்றத்தின் பொதுவான முன்னுரிமைகளை அமைப்பது மற்றும் பொருளாதார ஸ்திரத்தன்மை தொடர்பான குறுகிய மற்றும் நடுத்தர கால பொதுவான குறைந்தபட்ச திட்டங்களில் உடன்பாடு எட்டுவது தொடர்பில்  சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் இன்று  பாராளுமன்ற கட்டடத் தொகுதியில் நடைபெற்ற ‘தேசிய சபையின்’ முதலாவது கூட்டத்தில் தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளன.

பிரதமர் தினேஷ் குணவர்தன, சபைத் தலைவர் அமைச்சர் சுசில் பிரேமஜயந்த, ஆளும் கட்சியின் பிரதான அமைப்பாளர் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க, எதிர்க்கட்சியின் பிரதான அமைப்பாளர் லக்ஷ்மன் கிரியெல்ல, அசங்க நவரத்ன, ரவூப் ஹக்கீம், ரிஷாத் பதியுதீன், மனோ கணேசன், பழனி திகாம்பரம், ஜீவன் தாகம்பரம், , சிசிர ஜயகொடி, நாமல் ஆகியோர் இந்த சந்திப்பில் கலந்து கொண்டனர்.ராஜபக்ஷ, ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, சாகர காரியவசம், அலி சப்ரி ரஹீம், ரோஹித அபேகுணவர்தன, வஜிர அபேவர்தன, அமைச்சர் திரன் அலஸ், சிவனேஷ்துரை சந்திரகாந்தன், சம்பிக்க ரணவக்க மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் பலர் கலந்துகொண்டனர். இதில் பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க தசநாயக்கவும் கலந்துகொண்டார்.

தேசிய சபையின் முதல் கூட்டத்தின் பின்னர், பிரதமர் தினேஷ் குணவர்தன, ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சி ஆகிய இரு கட்சிகளும் தேசிய சபையின் கூட்டத்தில் கலந்து கொண்டதாக தெரிவித்தார். பாராளுமன்ற வேலைத்திட்டத்தை முன்னெடுத்துச் செல்வதற்கும், மக்களுக்கும் பாராளுமன்றத்துக்கும் இடையிலான நம்பிக்கையை மேலும் வலுப்படுத்துவதற்கும் தேசிய ரீதியில் திறக்கப்பட்டுள்ள புதிய கதவு இந்த நற்செய்தியாகும் என்றார்.

மேலும் இன்று நடைபெற்ற கூட்டத்தொடரில் ஒவ்வொரு வியாழக்கிழமையும் தேசிய சட்டமன்றம் கூடும் என முடிவு செய்யப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here