மனித உரிமைகள் பேரவையின் நிபந்தனைகளை ஜனாதிபதி இரகசியமாக நிறைவேற்றுவார் – வாசு குற்றச்சாட்டு

344

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் நிபந்தனைகளை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இரகசியமான முறையிலாவது நிறைவேற்றுவார் என வாசுதேவ நாணயக்கார சாடியுள்ளார்.

ஜெனிவா விவகாரத்தில் அவரது வாக்குறுதிகள் மீது நம்பிக்கை கொள்ள முடியாது என்பதனால் இலங்கை தொடர்பான அறிக்கை குறித்து நாடாளுமன்ற விவாதத்தை கோரவுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

ஒவ்வொரு வருடமும் இலங்கைக்கு எதிராக பிரேரணைகள் கொண்டு வரப்பட்டு, அவை நிறைவேற்றப்பட்ட போதும் இதனால் எவ்வித பயனும் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு கிடைக்கப்பெறவில்லை என்றும் வாசுதேவ நாணயக்கார சுட்டிக்காட்டியுள்ளார்.

தமிழ் மக்களுக்கு அரசியல் ரீதியில் தீர்வு பெற்றுக்கொடுப்பதாக குறிப்பிட்டுக்கொண்டு தமிழ் அரசியல்வாதிகள், தமிழர்களுக்கான அபிவிருத்திகளை தொடர்ந்து புறக்கணித்து வருவதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

மனித உரிமைகள் பேரவையில் ஜனாதிபதி ரணில் விக்கிரசமசிங்க அமெரிக்காவின் நிகழ்ச்சி நிரலுக்கமையவே செயற்படுவார் என்றும் அவரது வாக்குறுதிகள் மீது நம்பிக்கை கொள்ள முடியாது என்றும் வாசுதேவ நாணயக்கார குறிப்பிட்டுள்ளார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here