இலங்கையின் மனித உரிமை மீறல் அறிக்கை அவுஸ்திரேலிய பாராளுமன்றத்தில்!

547

நியூ சவுத் வேல்ஸ் (NSW) பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்று சிட்னியில் வாழும் புலம்பெயர்ந்த இலங்கையர்களிடம் இலங்கையின் மனித உரிமை மீறல் அறிக்கையை தமது அடுத்த பாராளுமன்ற அமர்வில் சமர்பிப்போம் என உறுதியளித்துள்ளனர்.

சட்ட சபை உறுப்பினர்கள் பீட்டர் பிரிம்ரோஸ் (Peter Primrose) மற்றும் அந்தோனி டி ஆடம்ஸ் ( Anthony D Adams) மற்றும் NSW பாராளுமன்ற உறுப்பினர் ஜேமி பார்க்கர் (Jamie Parker) ஆகியோர் ஜகத் பண்டார (Jagath Bandara) தலைமையிலான இலங்கைக் குழுவை கடந்த புதன்கிழமை நியூ சவுத் வேல்ஸ் (NSW) பாராளுமன்ற கட்டிடத்தில் உள்ள McKell அறையில் சந்தித்தனர்.

இலங்கையில் நடைபெற்ற அமைதியான போராட்டங்களை பொலிசார் மற்றும் பாதுகாப்புப் படையினர் கொடூரமான முறையில் ஒடுக்குவது குறித்து நியூ சவுத் வேல்ஸ் (NSW) பாராளுமன்றப் பிரதிநிதிகளிடம் அவர்கள் விடுத்த கோரிக்கை மனித உரிமை மீறல்களை விரைவாக விசாரிக்க வழிவகுத்துள்ளதாகவும், அதற்கு சாதகமான பதில் கிடைத்துள்ளதாகவும் ஜகத் பண்டார தெரிவித்தார்.

“இலங்கையில் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக நாங்கள் சமர்ப்பித்த அறிக்கைகள் அடுத்த நாடாளுமன்ற அமர்வில் சமர்ப்பிக்கப்படும் என்றும், அந்த செய்திகள் அந்தந்த கட்சிகளுக்கும் தெரிவிக்கப்படும் என்றும் ஜேமி பார்க்கர் (Jamie Parker) எங்களுக்கு உறுதியளித்தார்.

மேலும், இலங்கையின் நிலைமை மேலும் மோசமடைவதைத் தடுப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளுக்காக அவுஸ்திரேலிய அரசாங்கத்திற்கு இலங்கையின் தரை நிலவரத்தை அறிவிக்கவுள்ளதாகவும் , இலங்கையில் தற்போது நிலவும் நிலைமை குறித்து அவர்கள் மிகவும் கவலை கொண்டுள்ளனர் எனவும் என்று ஜகத் பண்டார தெரிவித்தார்.

பயங்கரவாதத் தடைச் சட்டம் (PTA) மற்றும் அவசரகாலச் சட்டங்கள் என்ற போர்வையில் இலங்கைப் படைகள் போராட்டக்காரர்களை மாதக்கணக்கில் தடுத்து வைத்து துன்புறுத்துவது குறித்து ஆலோசிக்க இலங்கைப் புலம்பெயர்ந்தவர்கள் விரைவில் அவுஸ்திரேலிய பெடரல் நாடாளுமன்றத்தின் கூட்டாட்சி உறுப்பினர்களைச் சந்திக்கவுள்ளதாகவும் ஜகத் பண்டார தெரிவித்துள்ளார்.

காலிமுகத்திடல் போராட்டக்காரர்கள் மீது தாக்குதல் நடத்திய அரசியல்வாதிகள் மற்றும் அவர்களது ஆதரவாளர்களால் மேற்கொள்ளப்பட்ட மனித உரிமை மீறல்களை இலங்கை அரசாங்கம் விசாரிக்க வேண்டும். அத்துடன், ஜூலை மாதம் காலி முகத்திடலில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத் தளத்தில் சட்டவிரோதமான கைதுகள், எதிர்ப்பாளர்கள் மீது அதிகளவிலான பலாத்காரம் பிரயோகித்தமை மற்றும் மிருகத்தனமான அடக்குமுறை போன்றவற்றிற்காக பாதுகாப்புப் படையினருக்கு எதிராக விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். அமைதியான முறையில் தங்கள் உரிமைகளைப் பயன்படுத்தியதற்காக கைது செய்யப்பட்டவர்களுக்கு எதிராக நிலுவையில் உள்ள அனைத்து குற்றச்சாட்டுகளும் விடுவிக்கப்பட வேண்டும், ”என்று ஜகத் பண்டார தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here