பதவிக் காலம் முடிந்து நாடு திரும்பவுள்ள கனடா மற்றும் பிரான்ஸ் தூதுவர்களை சந்தித்தார் ஜனாதிபதி

439

இலங்கையில் தமது பதவிக் காலம் முடிந்து நாடு திரும்பவுள்ள கனடா உயர்ஸ்தானிகர் டேவிட் மெக்கினொன் (David McKinnon) மற்றும் பிரான்ஸ் தூதுவர் எரிக் லவே(ர்)து (Eric Lavertu) ஆகியோர் இன்று காலை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை, ஜனாதிபதி அலுவலகத்தில் தனித்தனியாக சந்தித்தனர்.

இச்சந்திப்பின்போது தமது பதவிக் காலம் முடிவடைந்துள்ளமை தொடர்பில் அவர்கள் ஜனாதிபதிக்கு உத்தியோகப்பூர்வமாக அறிவித்தனர்.

May be an image of 2 people and people standing

அதனைத் தொடர்ந்து ஜனாதிபதி, கனேடிய உயர்ஸ்தானிகர் மற்றும் பிரான்ஸ் தூதுவர் ஆகியோருடன் நல்லெண்ணம் அடிப்படையில் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருந்தார்.

டேவிட் மெக்கினொன் 2017 ஆம் ஆண்டு ஒக்டோபர் 23 ஆம் திகதி முதல் இலங்கைக்கான கனேடிய தூதுவராகவும் எரிக் லவே(ர்)து 2018 ஆம் ஆண்டு நவம்பர் 01 ஆம் திகதி முதல் இலங்கைக்கான பிரான்ஸ் தூதுவராகவும் கடமையாற்றியுள்ளமை குறிப்பிடதக்கது.

May be an image of 2 people, people sitting, suit and indoor

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here