follow the truth

follow the truth

May, 16, 2025
Homeஉள்நாடுபெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு தீபாவளி முற்பணமாக 15,000 ரூபா! – சஜித் கோரிக்கை

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு தீபாவளி முற்பணமாக 15,000 ரூபா! – சஜித் கோரிக்கை

Published on

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் தீபாவளி முற்பணத்தை 15 ஆயிரம் ரூபா வரை அதிகரிக்குமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ கோரியுள்ளார்.

இன்றைய நாடாளுமன்ற அமர்வில் அவர் இதனைத் தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில்,

“கடந்த காலங்களில், பெரும்பாலான பெருந்தோட்ட நிறுவனங்களால் பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு தீபாவளி முற்பணமாக 5 ஆயிரம் ரூபா வழங்கப்பட்டு வந்தது.

எனினும், தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் தீபாவளிப் பண்டிகையைக் கொண்டாட அந்தத் தொகை போதுமானதல்ல.

எனவே, எதிர்வரும் தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு வழங்கப்படும் தீபாவளி முற்பணத்தை 15 ஆயிரம் ரூபா வரை அதிகரிப்பது பொருத்தமாக இருக்கும் என்று இந்தச் சபையில் பரிந்துரைக்கின்றேன்.

இவ்வாறு வழங்கப்படுவது கடன் என்பதால் தேயிலை சபை ஊடாக தலையிட்டு அரசு இந்த முற்பணத்தை வழங்க முடியும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.

இதற்குப் பதிலளித்த பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் ரமேஷ் பத்திரன, இது தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது. கடன்களை வழங்க ஆவண செய்யுமாறு தேயிலை சபைக்கு அறிவித்துள்ளேன் என தெரிவித்தார்

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

எதிர்காலத்தில் ஆயிரம் ஆரம்ப வெளிநோயாளர் சிகிச்சை பிரிவுகள் நிறுவப்படும்

எமது வைத்தியசாலை முறைமையில் வெளிநோயாளிகள் பிரிவு, வெளிநோயாளிகளின் எண்ணிக்கையைச் ஈடுசெய்ய சிரமப்படுகிறது. ஆண்டுதோறும் சுமார் 120 மில்லியன் மக்கள்...

மாகாண சபை, உள்ளூராட்சி நிறுவனங்களில் ஊழல் மோசடிகளை தடுக்க விசாரணைப் பிரிவுகளை நிறுவ அனுமதி

ஊழல் மற்றும் முறைகேடுகளைத் தடுக்க அமைச்சு மட்டத்தில் நிறுவப்பட்டுள்ள விசாரணைப் பிரிவுகளை மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி நிறுவனங்களுள்...

ஜனாதிபதி செயலகத்தின் வாகன ஏலம் நிறைவு – 200 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான வருமானம்

ஜனாதிபதி அலுவலக அதி சொகுசு வாகன ஏலத்தின் இரண்டாவது கட்டமாக சொகுசு வாகனங்கள் மற்றும் பாவனையிலிருந்து நீக்கப்பட்ட 26...