follow the truth

follow the truth

May, 14, 2024
Homeஉள்நாடுதுப்பாக்கி உரிமங்களை புதுப்பிக்க காலக்கெடு!

துப்பாக்கி உரிமங்களை புதுப்பிக்க காலக்கெடு!

Published on

தனிப்பட்ட துப்பாக்கிகளை வைத்திருப்பவர்கள் அல்லது தனியார் பாதுகாப்பு நிறுவனங்களில் துப்பாக்கி வைத்திருப்பவர்கள் தங்கள் உரிமங்களை புதுப்பிக்குமாறு பாதுகாப்பு அமைச்சு இன்று  அறிவித்துள்ளது.

டிசம்பர் 31ஆம் திகதிக்கு முன்னர் உரிமங்களை புதுப்பிக்க வேண்டும் என்றும் அதற்கு பின்னர் துப்பாக்கி உரிமங்கள் புதுப்பிக்கப்படாது என்றும் அந்த அமைச்சு தெரிவித்துள்ளது.

அதன்பின்னர், செல்லுபடியாகும் உரிமம் இல்லாமல் துப்பாக்கியை வைத்திருக்கும் மற்றும் இயக்கும் எவருக்கும் துப்பாக்கிகள் கட்டளைச் சட்டத்தின் பிரிவு 22இன் படி அபராதம் விதிக்கப்படும் என்றும் அந்த அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

விண்ணப்பப் படிவங்களை தற்போது அதன் உத்தியோகபூர்வ இணையத்தளமான http://www.defence.lk இல் பெற்றுக்கொள்ள முடியுமென பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.

LATEST NEWS

MORE ARTICLES

உயர்தர வகுப்புகளை உடனடியாக ஆரம்பிக்க அனுமதி

கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை நிறைவடைந்தவுடன் உயர்தர வகுப்புகளை உடனடியாக ஆரம்பிக்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. அதற்கமைவாக,...

சுற்றுலாப் பயணிகளுக்கு ‘தேநீர் பரிசு’

இலங்கைக்கு வரும் ஒவ்வொரு வெளிநாட்டு உல்லாசப் பயணிகளுக்கும் விமான நிலையத்தில் இலங்கை தேயிலை நினைவுப் பரிசை வழங்குவதற்கு ஏற்பாடு...

பலியான 6 மாத மழலை : இது யாருடைய தவறு?

உலகில் உள்ள பெற்றோருக்கு தங்கள் குழந்தைகளை விட விலைமதிப்பற்ற எதுவும் இல்லை. குழந்தைகளுக்காக எதையும் செய்ய பெற்றோர்கள் இருமுறை யோசிப்பதில்லை. ஆனால்...