நாட்டில் 110 அத்தியாவசிய மருந்துகளுக்கு தட்டுப்பாடு!

450

நாட்டில் நூற்றுக்கும் மேற்பட்ட அத்தியாவசிய மருந்துகளுக்கு தட்டுப்பாடு நிலவுவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதற்கமைய மருத்துவ துறையில் அத்தியாவசியமாக கருதப்படும் 110 அத்தியாவசிய மருந்துகளுக்கு பற்றாக்குறை நிலவுவதாக மருத்துவர் அன்வர் ஹம்தானி குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில் கையிருப்பில் காணப்படுகின்ற மருந்துகளை முகாமைத்துவம் செய்வதன் மூலம் நோயாளர்களை பராமரித்து செல்வதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

எவ்வாறாயினும் மருந்து பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய பல்வேறு வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் சர்வதேச ஔடதங்கள் குறித்த பிரதான தொடர்பாளர் மருத்துவர் அன்வர் ஹம்தானி தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here