31 இலட்சம் குடும்பங்களுக்கு நலன்புரி உதவிகள்!

564

இலங்கையில் குறைந்த வருமானம் பெறும் 31 இலட்சம் குடும்பங்களுக்கு நலன்புரி உதவிகள் வழங்கும் வேலைத்திட்டம் துரிதப்படுத்தப்பட்டுள்ளதாக  நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்தார்.

‘எவரையும் கைவிடாதீர்’ எனும் தொனிப்பொருளில் நாட்டின் அனைத்து மாவட்டங்களையும் உள்ளடக்கும் வகையில் இந்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

இந்த திட்டத்தின் கீழ், சமுர்த்தி, முதியோர், மாற்றுத்திறனாளிகள் மற்றும் சிறுநீரக நோய் வாழ்வாதாரத் திட்டத்தின் கீழ் பயனடையும் குடும்பங்கள் அல்லது தனிநபர்கள், மானியங்களை எதிர்பார்த்து காத்திருப்போர் பட்டியலில் உள்ளவர்கள் மற்றும் தற்போதைய பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டு அரசாங்க உதவியை எதிர்பார்ப்போருக்கு இந்த சலுகைகள் கிடைக்கும் என இராஜாங்க அமைச்சர்  ஷெஹான் சேமசிங்க  தெரிவித்தார்.

பயனாளிகளிடமிருந்து விண்ணப்பங்கள் கோரும் பணிகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும், அதற்கான கால அவகாசம் ஒக்டோபர் 15 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

நலன்புரி நன்மைகள் சபையின் www.wbb.gov.lk இணையத்தளத்தில் இருந்து  விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்துகொள்ள முடியும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here