மீண்டும் தன் கட்சியில் எவரேனும் பதவிப் பிரமாணம் செய்துகொள்ள இருக்கிறார்களா என்பது தனக்குத் தெரியாது – மைத்ரி

398

எதிர்வரும் நாட்களில் அமைச்சரவை அமைச்சர்களாக ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியில் எவரேனும் பதவிப் பிரமாணம் செய்துகொள்ள இருக்கிறார்களா என்பது தனக்குத் தெரியாது என முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

கண்டி ஸ்ரீ தலதா மாளிகையில் இன்று (09) வழிபாடுகளில் ஈடுபட்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே முன்னாள் ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்து கருத்து வெளியிட்ட அவர், “அங்கு மேலும் உரையாற்றிய முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன,

“எனக்குத் தெரியாது. எங்களில் சிலர் அமைச்சுப் பதவிகளை பெற்றுவிட்டார், மேலும் சிலர் அமைச்சுப் பதவிகளை பெற இருக்கிறார்களா என்பது தெரியாது, நாங்கள் அமைச்சுப் பதவிகளை பெற மாட்டோம். நாங்கள் சர்வகட்சி அரசாங்கத்தை முன்மொழிந்தோம். சர்வகட்சி அரசாங்கம் நிறுவப்படவில்லை. ஒரு அனைத்து கட்சி ஆட்சி அமையுமானால் சர்வதேச ஆதரவும், உதவியும், கடனுதவியும் கிடைக்கும். ஆனால், சர்வகட்சி அரசு அமைவது ஆளும்கட்சிக்கு பிடிக்கவில்லை. இந்நிலையில், அதிகாரபூர்வமாக ஆளும் கட்சியுடன் கட்சியாக சேர முடியாது. ஆனால், மக்களின் நலனுக்காக எடுக்கப்படும் நல்ல விடயங்களுக்கு நாங்கள் நிச்சயமாக ஆதரவு வழங்குவோம்“ என்றார்.

பொதுஜன பெரமுன புதிய முகத்துடன் களுத்துறையிலிருந்து பயணத்தை ஆரம்பித்துள்ளது. அந்த நிலையை எப்படிப் பார்க்கிறீர்கள் என்று ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு, “இது ஒரு சின்ன ஜோக். நான் சொல்ல வேண்டியது அவ்வளவுதான். இது செயற்கையானது.” என்றும் குறிப்பிட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here