follow the truth

follow the truth

May, 19, 2024
HomeTOP2சர்வதேச கைத்தொழில் கண்காட்சி ஜூனில்

சர்வதேச கைத்தொழில் கண்காட்சி ஜூனில்

Published on

சர்வதேச கைத்தொழில் கண்காட்சி “Industry EXPO 2024” ஜூன் 19 முதல் 23 வரை பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் (BMICH) நடைபெறும் என்றும், அதன் திறப்பு விழா ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் நடைபெறும் என்றும் கைத்தொழில் மற்றும் சுகாதார அமைச்சர் வைத்தியர் ரமேஷ் பதிரண தெரிவித்தார்.

நிலைபேறான பசுமைக் கைத்தொழில் கலாசாரத்தை ஊக்குவிப்பதற்கான முதலாவது சர்வதேச மாநாடு மற்றும் “Industry Green Awards” விருது வழங்கும் விழா நடைபெறவுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

ஜனாதிபதி ஊடக மையத்தில் இன்று (06) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே கைத்தொழில் மற்றும் சுகாதார அமைச்சர் ரமேஷ் பதிரண இதனைத் தெரிவித்தார்.

இக்கண்காட்சி இலங்கையில் உள்ள 25 தொழில்துறைகளை பிரதிநிதித்துவப்படுத்தும் 1300 க்கும் மேற்பட்ட விற்பனை கூடங்களை உள்ளடக்கியது. புத்தாக்கம் மற்றும் புதிய தொழில் நுட்பத்துடன் புதிய கைத்தொழில்களின் பல அம்சங்களையும் இக்கண்காட்சியில் காண முடியும். புத்தாக்கத்துக்கான தனி வளாகமும் இதில் சேர்க்கப்பட்டுள்ளது.

இந்த கண்காட்சிக்கு இணையாக இந்நாட்டில் வாகன உதிரிப் பாகங்களை ஒன்றிணைக்கும் 25 இற்கும் அதிகமான நிறுவனங்களின் பங்களிப்புடன் தேசிய வாகனப் பேரணி (National Vehicle Parade) ஜூன் 18 ஆம் திகதி காலி முகத்திடலில் ஆரம்பமாகி BMICH வளாகம் வரை செல்லவுள்ளது.

மேலும், இந்தக் கண்காட்சியுடன் இணைந்த வகையில், ஜூன் 20 மற்றும் 21 ஆம் திகதிகளில் நிலைபேறான பசுமைக் கைத்தொழில் கலாசாரத்தை ஊக்குவிப்பதற்கான முதல் சர்வதேச மாநாடாக (Green Industry Initiative for Sustainable Industrial Development) நிலைபேறான பசுமைக் கைத்தொழில்களுக்கான ‘தொழில்நுட்ப பசுமை விருது வழங்கும் விழா, பண்டாரநாயக்க சர்தேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெறவுள்ளது.

அத்துடன், இக்கண்காட்சிக்கு அமைச்சுகள், அரச நிறுவனங்கள் மற்றும் தனியார் நிறுவனங்கள் பங்களிப்பு வழங்குவதுடன் அவை கண்காட்சியில் பங்குபற்றுகின்றன. உலகில் உள்ள புதிய கைத்தொழில் வாய்ப்புகள், புதிய முதலீட்டாளர்கள், மற்றும் முதலீட்டு வாய்ப்புகள் பற்றி அறிந்து , உற்பத்தித் தொழில்களைத் தொடங்கவும் இது உதவும்” என்று கைத்தொழில் மற்றும் சுகாதார அமைச்சர் வைத்தியர் ரமேஷ் பதிரண மேலும் தெரிவித்தார்.

LATEST NEWS

MORE ARTICLES

“சுரக்ஷா” மாணவர் காப்புறுதியை மீண்டும் ஆரம்பிக்குமாறு பணிப்புரை

பொருளாதார நெருக்கடி காரணமாக தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ள "சுரக்ஷா" மாணவர் காப்புறுதியை மீண்டும் ஆரம்பிக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பணிப்புரை...

2024 ஐபிஎல் தொடரில் இருந்து வெளியேறியது சென்னை சூப்பர் கிங்ஸ்

17ஆவது இண்டியன் பிறீமியர் லீக் நேற்றைய போட்டியில் சென்னை சுப்பர் கிங்ஸை 27 ஓட்டங்களால் றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு...

கொழும்பில் சில வீதிகளுக்கு பூட்டு

15ஆவது இராணுவ நினைவு தின தேசிய நிகழ்வு இன்று பிற்பகல் நாடாளுமன்ற மைதானத்துக்கு அருகில் உள்ள இராணுவ நினைவுத்...