ஜோன்ஸ்டன் உள்ளிட்ட மூவருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்

406

முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ உள்ளிட்ட மூவருக்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றத்தில் இன்று குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அமைச்சராக பதவி வகித்த காலத்தில் சதொச ஊழியர் குழுவை பணியிலிருந்து நீக்கி அரசியல் நடவடிக்கைகளுக்காக ஈடுபடுத்தியமை மூலம் அரசாங்கத்திற்கு 59 இலட்சம் ரூபாவுக்கும் அதிக தொகை நட்டம் ஏற்படுத்தியதாக பெர்னாண்டோ உள்ளிட்ட மூவருக்கு எதிராக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.

இந்த வழக்கு இன்று கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி நாமல் பலல்ல முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகைகளில் குறித்த வழக்கில் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ள ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, எஸ்.டி.ஏ.வின் முன்னாள் தலைவர் எராஜ் பெர்னாண்டோ மற்றும் முன்னாள் பணிப்பாளர் மொஹமட் சாகிர் ஆகியோரிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

குற்றஞ்சாட்டப்பட்ட ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவின் சார்பில் ஆஜரான சட்டத்தரணிகள், குற்றப்பத்திரிகைகள் தொடர்பான பூர்வாங்க ஆட்சேபனைகளை முன்வைக்க எதிர்பார்ப்பதாக நீதிமன்றில் தெரிவித்தனர்.

இதனைத் தொடர்ந்து குறித்த வழக்கு மீதான விசாரணை எதிர்வரும் நவம்பர் 01ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here