போராட்டத்தின்போது பொலிஸாரின் நடவடிக்கைக்கு பொருளாதார நீதிக்கான பெண்ணியக் கூட்டமைப்பு கண்டனம்

390

இலங்கையில் தற்போதைய ஆட்சியில் அமைதி வழியில் போராட்டம் நடத்துபவர்களுக்கு எதிரான வன்முறைகளை வன்மையாகக் கண்டிப்பதாக பொருளாதார நீதிக்கான பெண்ணியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது

அந்த கூட்டமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், ஒரு தாயும் குழந்தையும் பொலிஸாரினால் வன்முறையாக இழுத்துச் செல்லப்பட்டதை உலகம் திகிலுடன் கண்டதாக தெரிவித்துள்ளது.

நேற்றைய போராட்டத்தில் அரசின் நடவடிக்கைகள் நுட்பமானவை அல்ல என்றும் அப்பட்டமான ஜனநாயக விரோதமான ஒரு சர்வாதிகார ஆட்சியின் கடுமையான நினைவூட்டல் என்றும் அந்த கூட்டமைப்பு மேலும் கூறியுள்ளது.

அரசின் இத்தகைய சட்ட விரோதமான மிருகத்தனமான செயல்கள் அனைத்தையும் நிறுத்த வேண்டும் என்று பொருளாதார நீதிக்கான பெண்ணியக் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.

அமைதியான முறையில் போராட்டம் நடத்தியதற்காக கைது செய்யப்பட்ட அனைவரையும் விடுவிக்க வேண்டும் என்றும் அந்த கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here