follow the truth

follow the truth

May, 21, 2024
Homeஉள்நாடுஇரண்டு இராஜாங்க அமைச்சுகளுக்கான விடயதானங்கள் வர்த்தமானியில் வெளியீடு

இரண்டு இராஜாங்க அமைச்சுகளுக்கான விடயதானங்கள் வர்த்தமானியில் வெளியீடு

Published on

கைத்தொழில் அமைச்சின் கீழ் உள்ள ஆரம்ப கைத்தொழில், சிறிய மற்றும் நடுத்தர தொழில் முயற்சிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சுகளுக்கான விடயதானங்கள் அதிவிசேட வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளன.

விடயத்துடன் தொடர்புடைய அமைச்சர் ரமேஷ் பத்திரவினால் இந்த அதிவிசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.

இதன்படி, லங்கா லேலண்ட் லிமிட்டட், மட்டுப்படுத்தப்பட்ட தேசிய கடதாசி நிறுவனம், தேசிய வெங்காய நிறுவனம், இலங்கை சீமெந்து கூட்டுத்தாபனம் மற்றும் தேசிய இரத்தினக்கல் ஆபரண அதிகார சபை உள்ளிட்ட 12 நிறுவனங்கள் ஆரம்ப கைத்தொழில் இராஜாங்க அமைச்சர் சாமர சம்பத் தஸநாயக்கவின் கீழ், கொண்டுவரப்பட்டுள்ளன.

இதுதவிர சிறிய மற்றும் நடுத்தர தொழில் முயற்சிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் பிரசன்ன ரணவீரவின் கீழ் தேசிய தொழில் முயற்சி அபிவிருத்தி அதிகார சபை, இலங்கை கைவினைப் பொருட்கள் சபை, தேசிய கைவினைப் பேரவை உள்ளிட்ட 11 நிறுவனங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன.

LATEST NEWS

MORE ARTICLES

தம்மிக்க பெரேராவிடமிருந்து மட்டக்களப்பிற்கு 3 IT வளாகங்கள்

உலகில் வளர்ந்த ஒவ்வொரு நாட்டின் கல்வியும் மேம்பட்ட நிலையில் இருப்பதால், கல்வி மூலம் நாட்டை கட்டியெழுப்ப முடியும் என...

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி கூட்டணியின் முதலாவது பேரணி

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையில் உருவாக்கப்படும் புதிய கூட்டணியின் முதலாவது பேரணி மற்றும் பொதுக்கூட்டம் எதிர்வரும் ஜூன் மாதம்...

இலங்கைக்கு முதன்முறையாக புத்தம் புதிய வகை பெட்ரோல்

முதன்முறையாக, இந்தியன் ஆயில் நிறுவனம், கடந்த மே மாதம் (18) மும்பையில் உள்ள ஜவஹர்லால் நேரு துறைமுக அறக்கட்டளையிலிருந்து...