ஜனாதிபதி நியூயோர்க் நோக்கி பயணமானார்

770

அமெரிக்காவின் நியூயோர்க் நகரில் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் 76 வது கூட்டத் தொடரில் கலந்து கொள்ளவதற்காக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அமெரிக்கா நோக்கி பயணமாகியுள்ளார்.

ஐக்கிய நாடுகள் சபையின் 76ஆவது கூட்டத்தொடர், எதிர்வரும் 21 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.

இந்நிலையில் எதிர்வரும் 22 ஆம் திகதி ஐக்கிய நாடுகள் பொதுச் சபை கூட்டத்தொடரில் ஜனாதிபதி உரையாற்றவுள்ளார்.

இந்த விஜயத்தின்போது பொருளாதாரம், கல்வி, விவசாயம் உள்ளிட்ட பல துறைகள் தொடர்பில் பல நாடுகளின் அரச தலைவர்களுடன், இரு தரப்பு கலந்துரையாடல்களை ஜனாதிபதி மேற்கொள்ளவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here