follow the truth

follow the truth

May, 19, 2024
Homeஉள்நாடுஇடமாற்றம் செய்யப்படும் சிறிகொத்த !

இடமாற்றம் செய்யப்படும் சிறிகொத்த !

Published on

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்த (Sirikotha) தற்போது அமைந்துள்ள இடத்தில் சில புவியியல் சிக்கல்கள் இருப்பதாக கண்டறியப்பட்டதையடுத்து அது வேறு இடத்திற்கு மாற்ற எதிர்பாத்துள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் உதவித் தலைவர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் கட்சியின் தலைவர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் ஆரம்பகட்ட கலந்துரையாடல்களை முன்னெடுத்தோம் ஆனால் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

ஜாதிக வத்து சேவக சங்கமயவின் (Jathika Wathu Sevaka Sangamaya) தற்போதைய அலுவலகம் அமைந்துள்ள இராஜகிரியவில் கட்சியின் தலைமையகத்தை இடமாற்றம் செய்வதே ஆரம்பக்கட்ட முன்மொழிவு எனவும்
இராஜகிரிய காணியை முதலீட்டாளர் ஒருவரிடம் ஒப்படைத்து பல மாடிக் கட்டிடத்தை நிர்மாணித்து புதிய கட்டிடம் கட்டி முடித்தவுடன் இரண்டு அல்லது மூன்று மாடிகளில் சிறிகொத்தவை மீள்குடியேற்ற திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.

 

LATEST NEWS

MORE ARTICLES

புத்தளத்தில் அனைத்து பாடசாலைகளுக்கும் நாளை விடுமுறை

சீரற்ற காலநிலை காரணமாக புத்தளம் மாவட்டத்திலுள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் நாளை (20) விசேட விடுமுறை வழங்கப்படவுள்ளதாக வடமேல் மாகாண...

கொழும்பு துறைமுகத்திற்கு அருகிலுள்ள கட்டிடம் ஒன்றில் தீ பரவல்

கொழும்பு துறைமுக வளாகத்தை அண்மித்துள்ள அதிவேக நெடுஞ்சாலைத் திட்டத்தின் பணியாளர்கள் வசிக்கும் கட்டிடமொன்றில் தீ பரவல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன. சம்பவ...

ஈரான் தூதுவரை தாக்கிய வர்த்தகர் விளக்கமறியலில்

இலங்கையில் ஈரானிய தூதுவரை தாக்கிய கொழும்பை சேர்ந்த வர்த்தகர் ஒருவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக கொம்பனித்தெரு பொலிஸார்...