follow the truth

follow the truth

June, 17, 2025
Homeஉள்நாடுஅரச நிறுவனங்கள் - மத வழிபாட்டுத் தலங்களில் சூரிய சக்தி மின்சார பிறப்பாக்கியை பொருத்த திட்டம்!

அரச நிறுவனங்கள் – மத வழிபாட்டுத் தலங்களில் சூரிய சக்தி மின்சார பிறப்பாக்கியை பொருத்த திட்டம்!

Published on

இலங்கை அரச நிறுவனங்கள் மற்றும் மத வழிபாட்டுத் தலங்களில் கூரை சூரிய சக்தி மின்சார பிறப்பாக்கிகளை பொருத்துவதற்காக, இந்தியக் கடன் திட்டத்தின் 100 மில்லியன் அமெரிக்க டொலர்களை பயன்படுத்தவுள்ளதாக மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன் விஜேசேகர தெரிவித்துள்ளார்.

அரசால் நடத்தப்படும் இலங்கை மின்சார சபைக்கு ஏற்பட்ட பாரிய இழப்பைக் குறைப்பதற்காக அரசாங்கம் மின்சாரக் கட்டணத்தை வரலாறு காணாத அளவுக்கு உயர்த்தியது.

இதனையடுத்து, சில பௌத்த பிக்குகள் மின்சாரப் பாவனைக்கான கொடுப்பனவுகளை செலுத்தப்போவதில்லை என்று அச்சுறுத்தினர்.

இந்தநிலையில் மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சகம், தேர்ந்தெடுக்கப்பட்ட வழிபாட்டுத் தலங்களில் மேற்கூரை சூரிய சக்தி மின்சாரப் பிறப்பாக்கிகளை இந்தியக் கடன் வரியுடன் நிறுவ இணங்கியுள்ளது.

(19) Kanchana Wijesekera on Twitter: “USD 100 Million Credit Line extended by Gov of India for RoofTop Solar will be used to equip Schools, Universities, Edu institutes, Hospitals, District & Divisional Secretariat’s, Govt buildings & Religious institutes. Progress was reviewed with officials of Indian HC, SEA & CEB. https://t.co/Zq8bT322ym” / Twitter

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இலங்கை – பிரான்ஸ் இடையே உடன்படிக்கை கைச்சாத்து

இலங்கை மற்றும் பிரான்ஸ் இடையிலான வௌிநாட்டு கடன் மறுசீரமைப்பு செயன்முறையுடன் தொடர்புடைய கடன் மறுசீரமைப்புக்கான உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டுள்ளது. கொழும்பில் இந்த...

இலங்கைக்கென தனித்துவமான உணவுப் பாதுகாப்பு குறியீட்டை உருவாக்குவது குறித்து அவதானம்

அடுத்த மூன்று மாதங்களுக்குள் இலங்கைக்கென தனித்துவமான உணவுப் பாதுகாப்பு குறியீட்டை உருவாக்குவதில் அரசாங்கம் கவனம் செலுத்துகிறது. உலக உணவுப் பாதுகாப்புக்...

எரிபொருளுக்கு தட்டுப்பாடு இல்லை

மத்திய கிழக்கில் நிலவும் போர் சூழ்நிலை காரணமாக நாட்டில் பெட்ரோலியம் பற்றாக்குறை ஏற்படக்கூடும் என்று சமூக ஊடகங்களில் பரவி...