follow the truth

follow the truth

May, 20, 2024
Homeஉலகம்இந்தியா காங்கிரஸ் கட்சியின் தலைவரானார் காந்தி குடும்பத்தின் விசுவாசி

இந்தியா காங்கிரஸ் கட்சியின் தலைவரானார் காந்தி குடும்பத்தின் விசுவாசி

Published on

காங்கிரஸ் கட்சித் தலைவர் பதவிக்கான தேர்தலில் மல்லிகார்ஜுன கார்கே (80) வெற்றி பெற்றுள்ளார்.

சோனியா குடும்பத்தைச் சேராத ஒருவர் 24 ஆண்டுகளுக்குப் பின்னர் கட்சிக்குத் தலைவராகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்திய தேசிய காங்கிரஸ் தலைவர் பதவிக்கு மூத்த தலைவர்கள் மல்லிகார்ஜுன கார்கே மற்றும் சசிதரூர் போட்டியிட்டனர்.

கடந்த 17-ம் தேதி நடைபெற்ற தேர்தலில், வாக்களிக்கத் தகுதி பெற்ற 9 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரில் 96 சதவீதத்தினர் வாக்களித்தனர். நேற்று காலை வாக்குகள் எண்ணப்பட்டு, முடிவுகள் அறிவிக்கப்பட்டன.

இத்தேர்தலில் மல்லிகார்ஜுன கார்கே 7,897 வாக்குகளும், சசிதரூர் 1,072 வாக்குகளும் பெற்றனர். 416 வாக்குகள் செல்லாதவையாக அறிவிக்கப்பட்டன.

இதையடுத்து, கட்சியின் புதிய தலைவராக மல்லிகார்ஜுன கார்கேவை, காங்கிரஸ் தேர்தல் ஆணையத் தலைவர் மதுசூதன் மிஸ்த்ரி அறிவித்தார். கார்கே வரும் 26-ம் திகதி பொறுப்பேற்க உள்ளதாக ரன்தீப் சுர்ஜேவாலா எம்.பி. அறிவித்தார்.

LATEST NEWS

MORE ARTICLES

ஈரான் அதிபர் பயணித்த ஹெலிகாப்டர் விபத்து – மீட்புப் பணியில் சிக்கல்

ஈரானிய ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி உள்ளிட்ட சிரேஷ் அதிகாரிகள் பயணித்த ஹெலிகொப்டர் விபத்துக்குள்ளானதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. அஜர்பைஜானின் மலை...

ஆப்கான் வெள்ளத்தில் 68 பேர் பலி

ஆப்கானிஸ்தானில் பருவமழையினால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி இதுவரை 68 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. ஆப்கானிஸ்தானில் தொடர்ந்து கனமழை...

சிங்கப்பூரில் ஒரே வாரத்தில் 25,900 பேருக்கு கொவிட்

சிங்கப்பூரில் மீண்டும் புதிய கொரோனா தொற்று பரவல் வேகமெடுக்க தொடங்கியுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. மே 5 முதல் 11...