பொறுப்புக்கூறலை உறுதிசெய்ய சர்வதேசப் பொறிமுறை அவசியம்!

388

பொறுப்புக்கூறலை உறுதி செய்யவும் தண்டனைகளில் இருந்து விடுபடும் போக்கை முடிவிற்குக் கொண்டுவரவும் சர்வதேசப் பொறிமுறை அவசியம் என சிவில் சமூகப்பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.

இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டு வந்துள்ள தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்குப் பொறுப்பான அமெரிக்க இராஜாங்க உதவிச்செயலர் டொனால்ட் லூவிடம் அவர்கள் இந்த விடயத்தை வலியுறுத்தியுள்ளனர்.

அதுமாத்திரமன்றி 13 ஆவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவதற்கும் வடக்கு கிழக்கு மாகாணங்களில் அதிகரித்துவரும் இராணுவமயமாக்கலை முடிவிற்குக் கொண்டுவர அமெரிக்க அழுத்தங்களை பிரயோகிக்க வேண்டும் என்றும் வலியறுத்தியுள்ளனர்.

மேலும் காணாமல்போனோர் பற்றிய அலுவலகம், இழப்பீட்டுக்கான அலுவலகம் போன்ற உள்ளகப் பொறிமுறைகளால் எவ்வித பலனும் கிட்டவில்லை என்றும் டொனால்ட் லூவிடம் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இதேவேளை பயங்கரவாதத்தடைச் சட்டத்தின் பிரயோகம், உத்தேச புனர்வாழ்வுப் பணியகச் சட்டமூலம் என்பன குறித்தும் மாகாணசபைத் தேர்தல், பொதுத்தேர்தல் மற்றும் ஜனாதிபதித் தேர்தல் ஆகியவற்றை இயலுமானவரை விரைவாக நடத்தவேண்டியதன் அவசியம் குறித்தும் கலந்துரையாடியுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here