எதிர்க்கட்சி தலைவரின் வாழ்த்துச் செய்தி!

379
´´வாழ்க்கையின் இருளை நீக்கி, ஒளியைக் கொடுக்கும்” பண்டிகையாக தீபாவளிப் பண்டிகை உலக வாழ் இந்துக்களால் கொண்டாடப்படுகிறது.

இந்துக்கள் இத்தினத்தில் எண்ணெய் வைத்து,நீராடி, புத்தாடை அணிந்து,ஆலய தரிசனம் செய்வதுடன், ஆலயங்கள் மற்றும் வீடுகளில் தீபங்கள் ஏற்றி வழிபடுவார்கள். அத்துடன் பெரியோர்களை வணங்கி,பரிசுப் பொருட்கள் பரிமாறி, பட்டாசு கொளுத்தி, உறவினர்களுடன் இனிப்பான சிற்றுண்டிகள் உண்டு, உலகெங்கும் உள்ள இந்துக்கள் தீபாவளிப் பண்டிகையைக் வெகு சிறப்பாகக் கொண்டாடுகிறார்கள்.

தீமையை தோற்கடித்து நன்மை கிடைத்த நன்னாளான இன்றைய தீபாவளி தினத்தில், நாட்டில் தற்போதுள்ள ஆபத்தான சூழ்நிலைமையை தோற்கடித்து நாட்டை கட்டியெழுப்ப நாம் அனைவரும் பிரார்த்தனை செய்வோம்.

தீபாவளிப் பண்டிகையை உலகிற்கு இருளை அகற்றி வெளிச்சம் தரும் பண்டிகையாகவும், அறியாமையை நீக்கி ஞானத்தை அளிக்கும் பண்டிகையாகவும் இந்து மக்கள் கொண்டாடுகின்றனர்.

புராதன இதிகாசங்களில் குறிப்பிடப்பட்ட சமூக நல்லிணக்கம், குடும்ப உறவுகளின் முக்கியத்துவம் மற்றும் புரிந்துணர்வு ஆகியவன்றின் ஒருமித்த நாளாக தீபாவளி தினம் கொண்டாடப்படுகிறது. மேலும் இலங்கை மக்களிடையே நல்லிணக்கத்தையும், பரஸ்பர புரிந்துணர்வையும் உருவாக்க இந்த அற்புதமான நன்னாள் பெரும் பங்களிப்பை வழங்குகிறது.

அனைவரினதும் வெறுப்பும் கோபமும் நீங்கி, மனித நல்லிணக்கம் நிறைந்த இலங்கையில் சுதந்திரமாகவும், நல்லிணக்கத்துடனும், சமாதானத்துடனும் வாழ தீபத்திருநாள் அனைவருக்கும் உறுதுணையாக அமையட்டும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here