இந்தியாவிடம் நெதர்லாந்து தோல்வி!

369

T-20 உலகக்கிண்ணத் தொடரின் சுப்பர்-12 சுற்று குழு இரண்டில் நடைபெற்ற தொடரின், 23ஆவது போட்டியில், இந்தியக் கிரிக்கெட் அணி, 56 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

சிட்னி மைதானத்தில் இன்று நடைபெற்ற இப்போட்டியில், இந்தியக் கிரிக்கெட் அணியும் நெதர்லாந்து கிரிக்கெட் அணியும் பலப்பரீட்சை நடத்தின.

இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இந்திய அணி, முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இந்தியக் கிரிக்கெட் அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 179 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

இதில் அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, விராட் கோஹ்லி 62 ஓட்டங்களையும், ரோஹித் சர்மா 53 ஓட்டங்களையும் சூர்ய குமார் யாதவ் 51 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

நெதர்லாந்து அணியின் பந்துவீச்சில், க்ளாசென் மற்றும் மீக்கிரென் ஆகியோர் தலா 1 விக்கெட்டினை வீழ்த்தினர்.

இதனைத்தொடர்ந்து 180 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு களமிறங்கிய நெதர்லாந்து அணியால், 20 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 123 ஓட்டங்களையே பெற முடிந்தது. இதனால், அந்த அணி, 56 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

இதன்போது அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, பிரிங்ல் 20 ஓட்டங்களையும் கொலின் அக்கர்மேன் 17 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

இந்தியக் கிரிக்கெட் அணியின் பந்துவீச்சில், புவனேஸ்வர் குமார், ஹர்ஸ்தீப் சிங், அக்ஸர் பட்டேல் மற்றும் அஸ்வின் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் மொஹமட் ஷமி 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

இப்போட்டியின் ஆட்டநாயகனாக, இந்திய சார்பில், 25 பந்துகளில் 1 சிக்ஸர் 7 பவுண்ரிகள் அடங்களாக, ஆட்டமிழக்காது 51 ஓட்டங்களை பெற்றுக்கொண்ட சூர்ய குமார் யாதவ் தெரிவுசெய்யப்பட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here