விவசாயத்தை மேம்படுத்த நெதர்லாந்து நாட்டு நிபுணர்கள் நாட்டுக்கு வருகை!

377

நவீன விவசாய அறிவு, தகவல் தொழிநுட்பம், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, போக்குவரத்து மற்றும் சுற்றுலா போன்ற துறைகளுக்கு தற்காலத்தில் நெதர்லாந்து போன்ற நாடுகளின் முதலீடுகள் இலங்கைக்கு மிக முக்கியமானவையாக அமைகின்றன. பிரதமர் தினேஷ் குணவர்த்தன தெரிவித்துள்ளார்.

இன்று அலரி மாளிகையில் புதிய நெதர்லாந்து தூதுவர் பொனீ ஹொர்பச் (Bonnie Horbach) சந்தித்தபோதே பிரதமர் இதனைத் தெரிவித்தார்.

உட்கட்டமைப்பு வசதிகளை அபிவிருத்தி செய்தல் மற்றும் விவசாயம் உள்ளிட்ட பல்வேறு துறைகளுக்கு, நெதர்லாந்திலிருந்து கிடைத்த உதவிகள் தொடர்பில் பிரதமர் தனது நன்றிகளைத் தெரிவித்தோடு, இந்நாட்டிலுள்ள அனைத்து கிராம அலுவலர் பிரிவுகளிலும் அரசு முன்னெடுத்துள்ள உணவுப் பாதுகாப்புத் திட்டங்கள் குறித்தும் தெளிவுபடுத்தினார்.

தகவல் தொழில்நுட்பம், சுற்றுலாத் துறை மற்றும் விவசாயம் உள்ளிட்ட பல துறைகளில் இலங்கைக்கு பெருமளவிலான சாத்தியங்கள் உள்ளதெனவும், உலகளாவிய ரீதியில் பொருளாதார நெருக்கடி நிலவும் இக்காலப்பகுதியைக் கடந்ததன் பின்னர், தமது நாடு இன்னும் பல திட்டங்களை முன்னெடுக்குமெனவும் நெதர்லாந்து தூதுவர் இதன்போது தெரிவித்தார்.

தமது நாடு, நவீன விவசாய தொழிநுட்பத்தில் பாரிய அபிவிருத்தியைக் கண்டுள்ளதால் நெதர்லாந்து நிபுணர்களை இலங்கைக்கு வழங்க முடியமெனவும், நெதர்லாந்தின் அநேகமான பிதேசங்கள் கடலை அண்டியதாகக் காணப்படுகின்றமையினாலும், அதிகளவான பிரதேசங்களில் உவர் நீர் காணப்படுவதாலும், நெதர்லாந்து நிபுணர்கள் உவர் நீரைக்கொண்ட பிதேசங்களில் பயிரிடக்கூடிய புதிய வகை உருளைக் கிழங்குகளை உருவாக்கியுள்ளனர் எனக் கூறிய நெதர்லாந்து தூதுவர், கடலை அண்டிய பிரதேசங்களில், விசேடமாக வடக்கு கிழக்கு பிரதேசங்களில் அத்தகைய பயிர்ச்செய்கையை ஆரம்பிப்பதற்கு, இலங்கைக்கு உருளைக்கிழங்கு வகைகளை வழங்க முடியுமெனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

காலநிலை மாற்றங்கள், வர்த்தகம் மற்றும் வணிகத் தொழில் செயற்பாடுகள், துறைமுக அபிவிருத்தி மற்றும் ஒருங்கிணைந்த திட்டங்கள் உள்ளிட்ட பிற துறைகள் மட்டிலும் இதன்போது அதிகளவான கவனம் செலுத்தப்பட்டது. மேலும் இலங்கையின் இருதரப்பு உறவுகள் மற்றும் அபிவிருத்திக்கான ஒத்துழைப்புகளை மேம்படுத்துவதே தமது பிரதான செயற்பாடாகும் எனவும் நெதர்லாந்து தூதுவர், பிரதமருக்கு உறுதியளித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here