இலங்கை அணிக்கு 168 ஓட்டங்கள் வெற்றியிலக்கு

410

உலகக்கிண்ண ரி20 தொடரின் இன்றைய போட்டியில் இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன.

போட்டியின் நாணய சுழற்சியில் நியூசிலாந்து அணி வெற்றிப் பெற்றுள்ள நிலையில் முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்துள்ளது.

அதனடிப்படையில் முதலில் களமிறங்கிய நியூசிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்களை இழந்து 167 ஓட்டங்களை பெற்றுக் கொண்டனர்.

துடுப்பாட்டத்தில் Glenn Phillips 104 ஓட்டங்களை பெற்றுக் கொண்டார்.

இலங்கை அணி சார்ப்பில் கசுன் ராஜித்த 2 விக்கெட்களை வீழ்த்தியிருந்தார்.

அதனடிப்படையில் இலங்கை அணிக்கு 168 ஓட்டங்கள் வெற்றியிலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here