follow the truth

follow the truth

May, 16, 2024
Homeவிளையாட்டுஇலங்கையை வென்றது நியூஸிலாந்து!

இலங்கையை வென்றது நியூஸிலாந்து!

Published on

இருபதுக்கு20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் இன்றைய போட்டியில் நியூஸிலாந்து அணி 65 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது.

போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற நியூஸிலாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

இதற்கமைய, அந்த அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்டுக்களை இழந்து 167 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

அணிசார்பில் அதிகபடியாக கிளென் பிலிப்ஸ் 64 பந்துகளில் 104 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.

இருபதுக்கு20 கிரிக்கெட் போட்டிகளில் அவர் பெற்ற இரண்டாவது சதம் இதுவாகும்.

இவர் 10 நான்கு ஓட்டங்கள் 4 ஆறு ஓட்டங்கள் அடங்கலாக இந்த 104 ஓட்டங்களை பெற்றார்.

பந்துவீச்சில் இலங்கை அணியின் கசுன் ராஜித 23 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

அத்துடன், மஹீஷ் தீக்ஷன, தனஞ்சய டி சில்வா, வனிந்து ஹசரங்க மற்றும் லஹிரு குமார ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டை கைப்பற்றினர்.

இந்த இன்னிங்ஸில் மொத்தமாக 10 உதிரி ஓட்டங்கள் வழங்கப்பட்டன.

இந்நிலையில், 168 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 19.2 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 102 ஓட்டங்களை மாத்திரம் பெற்று தோல்வியை தழுவியது.

அணிசார்பில் அதிகபடியாக அணித்தலைவர் தசுன் சானக்க 35 ஓட்டங்களையும், பானுக ராஜபக்ஷ 34 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.

துடுப்பாட்டத்தில் சோபிக்க தவறிய இலங்கை அணியின் ஏனைய வீரர்கள் 20க்கும் குறைந்த ஓட்டங்களையே பெற்றனர்.

பந்துவீச்சில் நியூஸிலாந்து அணியின் டிரெண்ட் போல்ட் 13 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுக்களை கைப்பற்றினார்.

அத்துடன், மிட்செல் சான்ட்னர் 21 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுக்களை கைப்பற்றினார்.

இந்த இன்னிங்ஸில் ஒட்டுமொத்தமாக 6 உதிரி ஓட்டங்கள் வழங்கப்பட்டன.

LATEST NEWS

MORE ARTICLES

2வது அரையிறுதிப் போட்டிக்கு மேலதிக நாள் வழங்கப்படாது

2024 இருபதுக்கு20 உலகக்கிண்ண போட்டியில் அரையிறுதி போட்டி நடைபெறவுள்ள தினத்துக்கு மாற்று தினம் ஒன்று வழங்கப்பட மாட்டாது என...

T20 சகலதுறை வீரர்கள் தரவரிசையில் வனிந்து ஹஸரங்க முதலிடத்தில்

சர்வதேச கிரிக்கட் பேரவையின் இருபதுக்கு 20 ஓவர் சகலதுறை வீரர்கள் தரவரிசையில், இலங்கை இருபதுக்கு 20 ஓவர் கிரிக்கெட்...

சமரி அத்தபத்துவுக்கான பாராட்டு விழா இன்று

இலங்கையின் சிறந்த கிரிக்கெட் வீரரான சமரி அத்தபத்துவுக்கான பாராட்டு விழா இன்று (15) மாலை கொழும்பு தாஜ் சமுத்ரா...