follow the truth

follow the truth

May, 15, 2024
Homeஉள்நாடுசிறார்களிடையே இன்புளுவென்சா தொற்று அதிகரிப்பு!

சிறார்களிடையே இன்புளுவென்சா தொற்று அதிகரிப்பு!

Published on

காய்ச்சல், சளி, இருமல் மற்றும் வாந்தி முதலான நிலைமைகள் தொடர்ந்தால், சிறார்களை, பாடசாலைக்கோ அல்லது பராமரிப்பு நிலையங்களுக்கோ அனுப்புவதைத் தவிர்க்குமாறு கொழும்பு ரிஜ்வே சிறுவர் சீமாட்டி வைத்தியசாலையின், சிறுவர் நோய் வைத்தியர் தீபால் பெரேரா பெற்றோர்களிடம் கோரியுள்ளார்.

சிறார்களிடையே இன்புளுவென்சா வைரஸ் பரவும் நிலை அதிகரிப்பதை தற்போது அவதானிக்கக்கூடியதாக உள்ளதென எமது செய்திச் சேவை வினவியபோது அவர் தெரிவித்துள்ளார்.

கடந்த சில நாட்களாக நிலவிய மழையுடன் குளிரான காலநிலை காணப்பட்டது. இதன் காரணமாக சிறார்களிடையே காய்ச்சல், சளி, இருமல் மற்றும் வாந்தி முதலான நோய்யறிகுறிகள் அதிகரித்தன.

அவர்களில் சிலரது மாதிரிகளை பரிசோதணைக்குட்படுத்தியதில் இன்புளுவென்சா வைரஸ் பரவல் அதிகரித்தது.

இன்புளுவென்சா வைரஸ் வேகமாக பரவும் எனவே சிறார்களிடையே குறித்த நோய் அறிகுறிகள் அதிகரித்தால் அது இன்புளுவென்சா நோய்த் தொற்றாக இருக்க கூடும்.

இந்த அறிகுறிகள் தென்படும் சிறார்களை வீட்டிலேயே வைத்திருக்க வேண்டும். குறிப்பாக அந்த சிறார்களுக்கு பரசிடமோல் மாத்திரை வழங்குவதுடன், இயற்கையான நீர் ஆகாரங்களை வழங்கி ஓய்வளிக்க வேண்டும்.

இந்த சிறார்களை பாடசாலைகளுக்கோ அல்லது பராமரிப்பு நிலையங்களுக்கோ அனுப்பினால் ஏனைய சிறார்களுக்கும் இந்த தொற்று விரைவில் பரவும். எனவே விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என கொழும்பு ரிஜ்வே சிறுவர் சீமாட்டி வைத்தியசாலையின், சிறுவர் நோய் வைத்தியர் தீபால் பெரேரா எச்சரித்துள்ளார்.

LATEST NEWS

MORE ARTICLES

சட்டத்தின் ஆட்சி இல்லாமல் ஒரு நாடு முன்னேற முடியாது

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நீதித்துறையின் முன்னேற்றத்திற்காக செய்ய வேண்டிய அனைத்தையும் செய்துள்ளார். ஒரு நாட்டுக்கு நீதித்துறை மிகவும் முக்கியமானது...

ஏப்ரலில் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு

2024 ஏப்ரல் மாதத்தில் 148,867 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகைத் தந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. இது...

மேலும் 40,000 பேரை இஸ்ரேலில் தொழிலுக்காக அனுப்புவோம்

பாராளுமன்றத்தில் ஆர்ப்பாட்டம் செய்வதன் மூலம் இஸ்ரேலிய போரை நிறுத்த முடியாது என தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர்...