follow the truth

follow the truth

May, 15, 2024
Homeஉள்நாடுபதிவு செய்யப்பட்ட வாகனங்கள் மாத்திரமே சரணாலயங்களுக்குள் பிரவேசிக்க முடியும் - ஜனாதிபதி

பதிவு செய்யப்பட்ட வாகனங்கள் மாத்திரமே சரணாலயங்களுக்குள் பிரவேசிக்க முடியும் – ஜனாதிபதி

Published on

யால, வில்பத்து மற்றும் ஹோர்டன் சமவெளி உள்ளிட்ட தேசிய முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகளில் பதிவு செய்யப்பட்டுள்ள சவாரி வாகனங்களைத் தவிர்த்து வேறு எந்தவொரு வாகனத்திற்கும் பிரவேசிப்பதற்கு தடை விதித்தல் போன்ற சுற்றுச்சூழல் பாதுகாப்பு சட்டங்களை உள்ளடக்கிய புதிய சட்ட மூலமொன்றை விரைவில் தயாரிக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உரிய தரப்பினருக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

குறித்த சட்ட மூலம் தயாரிக்கப்படும் வரை இந்த தேசிய சரணாலயங்களுக்குள் பதிவு செய்யப்பட்ட வாகனங்களை தவிர, வேறு எந்த வாகனமும் பிரவேசிப்பதற்கு அனுமதியளிக்கப்படக் கூடாது என்றும் ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளார்.

அத்தோடு சிவனொளிபாதமலையை அண்மித்த வனம் மற்றும் சிங்கராஜ வனம் போன்ற சூழலியல் முக்கியத்துவம் வாய்ந்த இடங்களை பாதுகாப்பதற்கு தனியான சட்டங்களை உடனடியாக உள்ளடக்குமாறும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பணிப்புரை விடுத்துள்ளார்.

சுற்றாடல் அமைச்சின் உயர்மட்ட அதிகாரிகளுடன் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி இந்த ஆலோசனைகளை வழங்கியுள்ளார்.

ஹோர்டனிலிருந்து பட்டிப்பொல வரையும் , ஒஹியோவிலிருந்து போக்குவரத்து வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதற்காக சுற்று சூழலுக்கு ஏதுவான இலத்திரனியல் வாகனங்களைப் பயன்படுத்துவதற்கும் எதிர்காலத்தில் நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறும் ஜனாதிபதி ஆலோசனை வழங்கியுள்ளார். இது தவிர கெபலித்த புனித பூமியை பாதுகாப்பதற்கான சட்டத்தை இயற்றுமாறும் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டில் வனப்பரப்பு 35 சதவீதம் என்ற குறைவான அளவிலேயே காணப்படுவதால், வனப்பகுதியை சேதப்படுத்தும் எந்தவொரு திட்டத்திற்கும் இடமளிக்கக் கூடாது எனவும், எதிர்காலத்தில் மேற்கொள்ளப்படும் அனைத்து அபிவிருத்தித் திட்டங்களிலும் இதனைக் கவனத்தில் கொள்ளுமாறும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

யால வில்பத்து மற்றும் ஹோடன் போன்ற சுற்றுச்சூழலுக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளுக்கு இலத்திரனியல் வாகனங்களைப் பயன்படுத்துவதை உடனடியாக மேற்கொள்ளுமாறு அறிவுத்தியுள்ள ஜனாதிபதி, இயற்கையின் அழகைப் பாதுகாப்பது தொடர்பான புதிய சட்டங்களும் இந்தச் சட்டத்தில் சேர்க்கப்படும் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

யால, வில்பத்து, ஹோர்டன் சமவெளி போன்றவற்றில் சுற்றாடலை பாதுகாக்கும் வகையில் பாதுகாப்பு அதிகாரிகளின் எண்ணிக்கையை உடனடியாக அதிகரிக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க விடுத்துள்ள பணிப்புரையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

LATEST NEWS

MORE ARTICLES

காலநிலை தாக்கம் இல்லாவிட்டால் தேயிலை உற்பத்தியில் சாதனை செய்ய முடியும்

”இலங்கையில் பெருந்தோட்டத்துறையில் ஆர்வமுள்ள இளைஞர்களுக்கு இந்த நிறுவனம் மிகவும் முக்கியமானதாகும்எனவும் இங்கு நல்ல கல்வி வழங்குவதற்கான சூழல் உள்ளது....

கல்வி நிர்வாக மறுசீரமைப்புக்கான சுற்றுநிருபம் விரைவில்

கல்வி நிர்வாக சீர்திருத்தத்தின் ஆரம்ப கட்டமாக நாடளாவிய ரீதியில் 1220 கொத்தணிப் பாடசாலைகள் உருவாக்கப்படுவதுடன், அவற்றைக் கண்காணிக்க 350...

வர்த்தமானி குறித்து இதுவரை முறைப்பாடுகள் கிடைக்கவில்லை

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு 1700 ரூபா சம்பளத்தை வழங்குவது தொடர்பில் வெளியிடப்பட்ட வர்த்தமானி குறித்து பெருந்தோட்ட நிறுவனங்களிடமிருந்து இதுவரையில் எவ்வித...