follow the truth

follow the truth

May, 17, 2024
Homeஉள்நாடுபுதிய பயணத்தை ஆரம்பித்துள்ள அமைச்சர்கள் குழு: ஆளும்கட்சிக்குள் மேலும் பிளவு

புதிய பயணத்தை ஆரம்பித்துள்ள அமைச்சர்கள் குழு: ஆளும்கட்சிக்குள் மேலும் பிளவு

Published on

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் மற்றுமொரு அமைச்சர்கள் கட்சியில் இருந்து பிரிந்து தனி குழுவை அமைப்பதற்கு தயாராகி வருவதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அரசாங்கத்துடன் இணைந்து அமைச்சரவை மற்றும் இராஜாங்க அமைச்சர்கள் பதவிகளை வகிக்கும் பலர் இதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது பதவிகள் இல்லாமல் இருக்கும் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்கள் குழுவும் இதில் இணைவதற்கு தயாராகி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

அடுத்த தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியுடன் நேரடியாக தொடர்பு கொள்ளாமல் தனியான குழுவாக கூட்டணி அமைக்கும் நோக்கில் அவர்கள் தயாராகி வருவதாகவும் அறியமுடிகிறது.

டலஸ் அழகப்பெரும மற்றும் அனுர பிரியதர்சன யாப்பா தலைமையிலான குழுவினர் தற்போது தனியான குழுக்களாக செயற்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

LATEST NEWS

MORE ARTICLES

இறக்குமதி செய்யப்படும் வெங்காயத்திற்கு வரி விதிக்க கோரிக்கை

இறக்குமதி செய்யப்படும் பெரிய வெங்காயத்திற்கு வரி விதிக்குமாறு பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித பண்டார தென்னகோன் விவசாய அமைச்சர்...

“அரசாங்கத்தின் பயணம் சரியில்லை. தீர்மானமொன்று எடுக்க வேண்டும்”

அரசாங்கத்தின் நிகழ்ச்சி நிரலை தாம் ஏற்றுக் கொள்ளவில்லை எனவும், அரசாங்கத்தின் நிகழ்ச்சி நிரலுக்கு எதிராக நாட்டுக்காக எந்தவொரு தீர்மானத்தையும்...

டயானாவிடம் சிஐடி 5 மணி நேரம் விசாரணை

முன்னாள் சுற்றுலாத்துறை அமைச்சர் டயானாவிடம் குற்றப் புலனாய்வுத் துறை 5 மணி நேரம் வாக்குமூலம் பதிவு செய்துள்ளது. அவர் பயன்படுத்திய...