அரசாங்கத்தின் அறிவுறுத்தல்களை பொருட்படுத்தாமல் செயற்படும் மாகாண சபைகள்!

412

அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட அறிவுறுத்தல்களை பொருட்படுத்தாது பல மாகாண சபைகள் தமது விருப்பத்திற்கேற்ப அதிகாரிகளை பணியமர்த்தியுள்ளதாக கணக்காய்வு திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.

சில ஆளுனர்களின் தயவால் இவ்வாறு ஓய்வு பெற்ற அதிகாரிகள் பணியமர்த்தப்பட்டுள்ளனர் என்பதுடன் அவர்களது ஓய்வூதியம் தவிர மற்றுமொரு உதவித்தொகையை இப்பதவிகளில் பெறுவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

உதாரணமாக மேல் மாகாணத்தில் மாநகர ஆணையாளர்களாக ஓய்வுபெற்ற பத்து அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

நாட்டின் பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்ளும் வகையில், ஓய்வூதியங்களை சிக்கனமாக பயன்படுத்த உத்தரவிடப்பட்டது.

அவ்வாறு வெளியேறிய அதிகாரிகளுக்கு வேறு சம்பளம் வழங்கி பணியமர்த்தப்பட்டுள்ளமை தொடர்பாக நிதியமைச்சு கவனம் செலுத்த வேண்டுமென கணக்காய்வு திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here