கெப்பத்திக்கொல்லாவ அமைதியின்மையின் போது தாக்குதலுக்குள்ளான பொலிஸ் சார்ஜன் உயிரிழப்பு

388

அனுராதபுரம் – கெப்பத்திகொல்லாவ, ரம்பகெப்புவெவ பகுதியில் ஏற்பட்ட அமைதியின்மையின் போது தாக்குதலுக்குள்ளான பொலிஸ் சார்ஜன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த பொலிஸ் சார்ஜனின் சடலம் மதவாச்சி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

வாரியபொல பிரதேசத்தைச் சேர்ந்த 54 வயதான பொலிஸ் சார்ஜனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

கெப்பத்திக்கொல்லாவ பகுதியில் காட்டு யானை தாக்கி நேற்று(31) மாலை ஒருவர் உயிரிழந்தார்.

இந்த சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வீதியை மறித்து மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவதாக கிடைத்த தகவலுக்கு அமைய, கெப்பத்திக்கொல்லாவ பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி உள்ளிட்ட குழுவினர் அங்கு சென்றுள்ளனர்.

இதன்போது ஒன்றுதிரண்ட மக்கள், பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி உள்ளிட்ட பொலிஸ் உத்தியோகத்தர்கள் மீது தாக்குதல் மேற்கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

நிலைமையை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவருவதற்காக வானை நோக்கி துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்தூவ குறிப்பிட்டார்.

தாக்குதலுக்கு இலக்காகிய பொலிஸ் அதிகாரியை மீட்பதற்காகவே வானை நோக்கி துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here