பாடசாலை கல்வியை இடைநிறுத்தும் மாணவர்கள்!

631

கொரோனா தொற்றுநோய் மற்றும் பொருளாதார நெருக்கடி காரணமாக வட மாகாணத்தில் உள்ள பாடசாலை மாணவர்கள் பாடசாலையை விட்டு வெளியேறியுள்ளனர் என வடமாகாணக் கல்வித் திணைக்களத்தினால் நடத்தப்பட்ட ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது.

2020ம் ஆண்டு கொரோனா தொற்றின் காரணமாக ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியில் வட மாகாணத்தில் 485 மாணவர்கள் பாடசாலையை விட்டு வெளியேறியுள்ளனர் என வடமாகாண கல்விப் பணிப்பாளர் எஸ். உதயகுமார் தெரிவித்துள்ளார்

மேலும் 2021 ஆம் ஆண்டில் பாடசாலையை விட்டு வெளியேறுபவர்களின் எண்ணிக்கை 105 ஆகக் குறைந்துள்ளதாகவும், ஆனால் 2022 ஆம் ஆண்டில் இதுவரை வடக்கில் 519 பாடசாலை மாணவர்கள் பாடசாலையை விட்டு வெளியேறி சென்றுள்ளதாகவும் வடமாகாண கல்விப் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

பொருளாதார நெருக்கடி காரணமாக பெற்றோர்கள் வேலைகளை இழந்துள்ளதால் பாடசாலை மாணவர்கள் மாகாணத்தை விட்டு வெளியேறி கொழும்பு மற்றும் ஏனைய பிரதேசங்களுக்கு வேலை தேடிச் செல்வதாக வடமாகாண கல்விப் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here